ஒரு தரம் பாருங்க நம்ம பெரியப்பு வந்திருந்தாங்க. ரயில் ஸ்டெஷனல போயி கூட்டியாந்தோம். மறுநாள் பள்ளிகூடத்துல தமிழ் கால் பரிட்சை. அதுல வாக்கியத்தில் அமைங்கிர பகுதில "அன்றலர்ந்த மலர்" க்கு வாக்கியம் அமைக்க சொல்லியிருந்தாங்க. உடனே நம்ம கற்பனை வேலை செஞ்சு வித்தாசமா வாத்தியார் சொல்லிக்குடுத்ததுலர்ந்து வாந்தி எடுக்காம வேற புதுசா எழுதனும்னு அதுக்கு இப்படி ரொம்ப யதார்த்தமா எழுதினேன்
" என்னுடை பெரியப்பா ரயிலிருந்து அன்றலர்ந்த மலர் போல் வந்திரங்கினார்னு".
இரண்டு நாள் கழித்து வாத்தியார் விடைத்தாளை திருத்தி என்னிடம் கொடுக்கும் போது "உங்க பெரிப்பு ACல வந்தாரா" ன்னு கேட்டார் [அந்த காலத்துல நாம AC கண்டமா PC கண்டமா?]. எனக்கு ஒண்ணும் அப்ப விளங்கல. வீட்டுக்கு வந்தா படிச்சுப்புட்டு எல்லாரும் மாத்தி மாத்தி சிரிக்கிராங்க. பெரியப்புவும் சேர்ந்து சிரிக்கிராரு. அப்புறம் போனா போவுதுன்னு "நீ இத அத்தி பூத்தார் போல-ங்கறதுக்கு எழுதிருந்தீன்னா சரியா இருந்துருக்கும்" ன்னு சொன்னப்பதா மண்டைக்குள்ள பல்ப் எரிஞ்சுது. ஆஹா அப்டியே கிழிச்சுட்ட மாதிரி கோட்டை கட்டியிருந்தோம் இப்படி அயிருச்சேன்னு ஆகிப்போச்சு.
இதாச்சா, அப்புறம் அதே காலகட்டத்துல அப்ப படிச்ச அம்புலிமாமா, ரத்னபாலா, முத்து காமிக்ஸ்-னால ஏற்பட்ட பாதிப்புல அப்பப்ப சுத்துபட்டு நண்டு, சிண்டுக்கெல்லாம் (அவிங்கதானே எத சொன்னாலும் உம் போட்ட்டுக்கிட்டு கேப்பாய்ங்க) அன்னன்னக்கி என்ன நடக்குதோ அதெல்லாத்தையும் கோர்த்து சும்மா வாய்க்கு வந்தபடி கத சொல்றது.
அதே கொஞ்சம் ஓவரா போயி எழுதரதுன்னு முடிவு பண்ணி ஒரு கொயர் நோட் ஒண்ணு ஏற்பாடு செஞ்சு அதுல எழுத ஆரம்பித்தேன். இபப்டியே போய்க்கிருஞ்சுதா இவன் என்ன அப்பப்பா காணாம போயி என்ன அப்படி எழுதரான்னு கூட பிறந்த ஒண்ணு நோண்டி என்னோட நோட்ட கண்டுபிடிச்சு வாசிச்சு கண்ணுல தண்ணி வர அளவுக்கு சிரிச்சு அது போராதுன்னு எல்லாரயும் கூப்பிடட்டு சவுண்டா ஒரு மீள் வாசிப்பு வேற.
அதுல எப்டி எழுதியிருந்தேன்னா சாம்பிளுக்கு
"நான் பேய் வருகிறென் என்று இன்ஸ்பேக்ட்டர் வன்டியை எடுத்துகொண்டு கிலம்பினார்"
"அவர் பேய்விட்டதாக கூரினார்"
என்று ஏடாகூடமான தமிழ்ல இருந்துச்சு. சரி ஏதோ சின்னப்பையன் ஆர்வக்கோளாறுல எழுத்திட்டான்னு கொஞ்சம் சரி பண்ணி தட்டிக் கொடுக்கறத விட்டுட்டு அவிங்க பண்ணின லொள்ளு போறாதுன்னு அத ஞாபகம் வெச்சுக்கிட்டு எங்காவது நாலு பேரு கூடிரப்டாது உடனே இத ஒரு ஜோக்குன்னு வேர எடுத்துவிட்டுருவாய்ங்க. அவ்வளவுதா அங்கன நிறுத்தினதுதான்பு. இப்போ நாமளே நம்ம பாத்து ரசிச்சு சிரிச்சு [laugh at yourself] எழுதற அளவுக்கு இந்த வலைபதியரதுங்கறது ஒரு வரப்பிரசாதமாகிப்போச்சு.
என்ன சொல்ல வரேன்னா அக்கம் பக்கத்துல யாராச்சும் பொடிசு இந்த மாதிரி கிளம்பிட்டாய்ங்கன்னா அவிங்கள ஊக்குவிக்கலேன்னாலும் பரவாயில்ல அவிங்க சீன்லேந்து போய்டாய்ங்களான்னு பாத்துட்டு சிரிங்க. இல்லேன்ன என்ன மாதிரி ஒரு முக்கியமான எழுத்தாளர இப்போ சமுதாயம் இழந்துட்ட மாதிரி [என்ன அங்க நமுட்டு சிரிப்பு? அதா சிரிக்காதேன்னு சொன்னேன்லா?] வர இருக்கற எழுத்தாளரும் வாராம போய்டுவாய்ங்க பாத்துக்க.
6 comments:
:-)))))
ஒண்ணுமில்லே சுரேஷூ,
சத்தம் வெளியே வந்துராமச் சிரிக்கறேன்
துளசி
ஹா ஹா!
சுரேஷ்,
இப்படித்தான் ஒருத்தன் எழுதினான்...
" ஹோட்டல் திறப்பு விழாவிற்கு மாவாட்ட கலெக்டர் சுப்புசாமி வருகை புரிந்தார் "...
இது எப்படி இருக்கு?
அதானே!!..சரியாச் சொன்ங்க சுரேஷ்!
சுரேசு அவிங்க சொன்னதுக்காக முயற்சி விட்டுறலாமா...
சும்மா எழுதி தள்ளிருக்க வேண்டியதுதான... இப்போ உங்களுக்கே அந்த எழுத்து நல்ல நல்ல மேட்டர மறுபதிப்பு செய்ய பயன்படும்ல.... என்ன நாஞ்சொல்றது ?
துளசி, +ராமா மற்றும் ஷ்ரேயா,
நாம எழுதறதயும் படித்தது மட்டுமின்றி பின்னூட்டமும் இட்டதற்கு நன்றி.
படிச்சுட்டு ஒரு சிறு புன்முறுவலாவது உங்களுக்கு வந்திருக்குமானால் அது என் பாக்கியம்.
நம்மாளுக சுத்தி நின்னு கும்மியடிச்சே சோலிய முடிச்சிப்புடுவாய்ங்க!
ஆமா நீரு ஏன் அதெல்லாம் பாத்தீரு.
சின்ன வயசுல கதை எழுதமுன்ன சொந்தக்காரங்களுக்கு காய்தம் எழுதணும்வே!
Post a Comment