என் கேள்விக்கென்ன பதில்?

துளசி எதையோ கேள்வி கேக்றாங்க இங்க இப்டி கேள்வி இருந்தா அதுக்கு தகுந்த மாதிரி பதில் சொல்ல ஒருத்தரு இருக்காரு.

சாம்பிளுக்கு:

கேள்வி: சில தியான மையங்களில் 'குண்டலினி சக்தி' என்று கூறி நமது அடிவயிற்றிலிருந்து முதுகுத்தண்டு வழியாக மேலே பயணித்து நெற்றிக்கு வந்து ஒரு 'சூப்பர் பவராக' மாறும் என்கிறார்களே அது எப்படி? அது உண்மையா?

-ஆர். பி. ராஜ்குமார். பரமக்குடி (அப்பாவி பாவம்)

பதில்: இதைப்பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. (பின்ன ஏன் பதில் எழுத வந்தே?) எதையாவது எழுதப்போய் உலகெங்கும் யோகா கிளாஸ் நடத்தி (ஜல்லியடித்துக்)(இது பதிலோட பகுதி என்னோடது இல்ல)கொண்டிருப்பவர்கள் "உனக்கு இதைப்பற்றி தெரியவில்லை என்றால் வாயையும் குண்டலினியையும் பொத்திக் கொண்டு சும்மா இருப்பதுதானே" என்பார்கள்.(இந்த லொள்ளுதாம்பா தாங்க முடில) எனக்கு தெரிந்த ஒரே ஆசனம் சவாசனம்.

(இவருக்கு உடனடியா ஒரு முக்கியமான ஆசனம் சொல்லிக்குடுக்க வேண்டியிருக்கு வாசகர்கள் யாராவது ஏற்பாடு செய்ய தாயாராய் இருந்ததால் உடனடியாக எனக்கு ஒரு செல்ப் அட்ரஸ்டு-ஸ்டாம்ப்டு கவர் வைத்து கடிதம் போடவும்).

பிகு: அன்புள்ள குமுதம் ஆசிரியருக்கு, இது மாதிரி கேள்வி பதில் எளுத என்னாலும் முடியும். இப்போ குட்டுக்றத விட 20% கம்மி சன்மானத்துல இதவிட வேடிக்கையாக எளுதுவேன். அவசியம் தொடர்பு கொள்ளவும்.

4 comments:

கிவியன் said...

சர்தன்பா நம்பி, குடுக்கவே வேணாம்.
யாரு கெலிச்சா என்ன?

துளசி கோபால் said...

ஐய்ய,
இதுதானே வேணாங்கறது! நான் எதாவது பெரியவரைப் பத்தித் தப்பாச் சொன்னேனா? அந்தப் பக்கத்துக்கு வந்த படம் பத்தித்தானே புலம்பினேன்?

கிவியன் said...
This comment has been removed by a blog administrator.
கிவியன் said...

துளசி

உங்கள தப்பா சொல்லல. நீங்க கேட்ட கேள்விக்குதான் அந்த சுட்டி.