விலங்குகள் மேல் அன்புள்ளவர்களுக்கு

இது நடந்து கிட்டத்தட்ட 9 மாதங்களிருக்கும். சுனாமியால் பாதிக்கப்பட்டது மனிதன் மட்டுமில்லை சில மிருகங்களும்தான். என் நண்பன் சென்னையில் அப்போதுதான் பிறந்த அனாதையாகிப்போன அந்த நாய் குட்டியை வீட்டுக்கு எடுத்துச் சென்றிருக்கிறான். பின்பு ஒரு மிருக வைத்தியர் அது டாஸ்ஹெண்ட எனப்படும் நல்ல உயர்ந்த ஜாதி நாயென்றும் சொல்லியிருக்கிறார். இப்போது இந்த நாய்க்கு ஒரு நல்ல வீடு தேவை. விலையேதுமின்றி இனாமாகக் கொடுக்க தயாராக இருக்கிறான். இவர் ஏன் இந்த நாயை குடுக்கிறாரென்றால் இவரது மனைவி உடை மாற்றும் போது தன்னை முறைத்துப்பார்க்கிரது என்ற வினோதமான குற்றம் சாட்டுகிரார். இது மிகவும் விசித்திரமான கற்பனைதானென்றாலும் வீட்டிலே இருக்கக்கூடாது என கூறிவிட்டதால்
வேறு வழியின்றி கொடுத்துவிட முடிவுசெய்துள்ளார். மற்றபடி குழந்தைகளுடன் அன்யோன்யமாக விளையாடும். ஆகவே யாருக்காவது வேண்டுமானால் என்னை தொடர்புகொள்ளவும். உங்களுக்கு இதனை நண்பர் தன் சொந்த செலவிலேயே அனுப்பி வைப்பார்.

அட பாருங்கள் மறந்தேவிட்டேன், அந்த நாயின் புகைப்படம் கீழே உள்ளது.


ஒரு புன்னகையாவது வந்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.

6 comments:

Lingsters said...
This comment has been removed by a blog administrator.
Jerry Simpson said...
This comment has been removed by a blog administrator.
துளசி கோபால் said...

சுரேஷூ,

இந்த 'லொள்'தானே வேணாங்குறது!

அது போகட்டும் எதாவது கார்பெட் க்ளீனிங் பிஸினெஸ் ஆரம்பிச்சுட்டீங்களா?இப்படி ஆளாளுக்கு வந்து லோலோன்னு கூவறாங்க!

இப்படியே 'மெளனமா' இருந்தா என்னா அர்த்தம்?

கிவியன் said...

துளசி
அரம்பிக்கலாம்னுதா இருக்கேன்.
பல சமயங்களில் மெளனம் ஆயுதம்.

துளசி கோபால் said...

சுரேஷூ,

இப்ப என்னாத்துக்கு ரிப்பீட்டு?

போது போகலைன்னா நம்ம வீட்டுக்குக் கொலுவுக்கு
ஒரு நடை வந்துட்டுப் போகலாமுல்லெ?

'வரேன்'னு சொன்னாத்தான் சுண்டலுக்கு ஊறப்போடுவேன், ஆமா.

கிவியன் said...

துளசி,

ரீப்பீட்டாவது, நீங்கவேர, பிபீ-க்கான புது நிரல் தூண்டிய சோதிச்சு பாக்க சொன்னாங்க அது என்னடான்னா ரீபீட்டெல்லாம் தானாவே ஆகுது. எதோ நல்லது நடந்தா சரி. பின்னூட்டத்துக்கு நன்றி. அதுக்காக சுண்டலுக்கெல்லாம் ஊரப்போட வேண்டாம். அப்புறம் பாடசொல்லுவீங்க போலருக்கே.