திரை விலகும் காலம்....

பனி விழும்காலம், இலையுதிர்காலம்..மாதிரி இப்ப திரை விலகும் சீஸன். அண்ணா விடாது கறுப்பு ஆரம்பிச்சு வச்சிருக்கார். "மவனே தில்லு இருந்தா நேரா பேசுன்னு" ஒளிவு மறைவு இல்லாம, நீ "அவன்" இல்லயா "இவனா" ஒ நீதானா அந்த அனானின்னு ஜல்லியடிக்ரத (இந்த வார்த்தை உபயோகப்படுத்தாம எழுதவே முடியாது போல்ருக்கு)தவிர்க்கும் படியா ஒரு நல்ல வரவேற்கத்தக்க மாறுதல். அத பின் பற்றி மொதோ வேலயா நம்ம ஃப்ரொஃபல்ல இருந்த "மெளன நரிய" அடிச்சு துரத்திட்டு என்னுடைய போட்டோவையே பா.பா., சு(p) ஷ்டைல்ல போட்டுட்டேன். (யாரு கேட்டா இப்போ?). அதாவது, எதாவது எழுதியே ஆவனும்டான்னு ஒரே மண்ட குடச்சலா இருந்ததால, ஆனா அதே சமயம் "இதானால் மக்களுக்கு என்ன பயன் அப்டீன்னு" உள்-மன-ஆந்தை வேற கேட்டுக்கொண்டதால உபயோகமா இல்லாட்டியும், ஒண்ணுமில்லாத விஷயத்த பர்த்டே பார்டில கிடைச்ச பலூன் மாதிரி ஊதி ஊதி பெரிசாக்கி, அவனவன் பாய பிராண்டர மாதிரி எழுதக்கூடாதுன்னு இப்டி ஒரு பதிவு.

ஆக வெளிச்சத்துக்கு வாங்கன்னு (இல்ல ஜோதில கலந்துருங்கன்னும் வெச்சுக்கலாம்) தில்லு இருக்ர சக பதிவாளர்களை அழைக்கிறேன். (ஆறு மாதிரி)

(ஒரு பயலும் கண்டுக்க போரதில்ல அப்புறம் இன்னாதுக்கு சவுண்ட் விட்டுக்கிட்டிருக்கேன்னு எங்கிருந்தோ ஒரு அசரீரி கேக்குதே..நாலு நாளா காதுல இந்த மாதிரி உபதேசமா கேக்குது சீக்கிரம் இ.என்.டி கிட்ட காமிக்கனும்) இதையும் ஒரு பதிவுன்னு மதிச்சு இம்மாந் தூரம் படிச்சிப்புட்டு பின்னூட்டம் வேர போடப்போறியா அய்யா ராசா/அம்மா நீ நல்லா இருக்கணும்..

டிஸ்க்ளெய்மர்: இது உள்/வெளி குத்து, நக்கல், நைச்சியம், எள்ளல், துள்ளல, மிரட்டல், துப்பல், எதுமில்லாத 'அஃமார்க்' வெகுளி பதிவு.

5 comments:

ரவி said...

நீங்க தான தாவூத் இப்ராகீம்...அப்புறம் - பாக்கிஸ்தானில் பிஸினஸ் எல்லாம் எப்படி போகுது ? ரியல் எஸ்டேட் நல்ல காசாமே ??

துளசி கோபால் said...

சுரேஷூ,

அது என்ன //"மெளன நரிய"// நரியா?

ஐய்யய்யோ நான் அதை மெளன 'நாய்'ன்னு இல்லே நினைச்சுக்கிட்டு இருந்தேன்.:-))))

கிவியன் said...

வாங்க ரவி, இப்பல்லாம் ஏகே-47க்கும், ஆர்டிஎக்ஸக்கும்தான் பாக்கிஸ்தான்ல நல்ல டிமாண்டு. அதுவும் ட்ரெயின்ல வெக்கனும்பான்னு சொன்னாபோதும், ஒரு 100கிராம் இனாமா குடுத்துர்ராய்ங்க. சரி தமிழ்மணத்துல யாரயாவது தூக்கரது, போட்டுர்ரது, முடிக்கனும்னா சொல்லி அனுப்புங்க. (சே இந்த அண்டர்வேல்டு படமா பாத்து இப்படியே வருது பாருங்க)..

துளசி, நாய வெச்சா நன்றியுள்ளவனா இருக்கனுமேன்னுதாம் நரி..சரிதானே?

பொன்ஸ்~~Poorna said...

திரை விலகும் காலமா? அது சரி..

பதிவு போட விஷயம் கிடைக்காதப்போ "படம் மாற்றும் காலம்"னு அல்ரெடி நாங்க ட்ரென்ட் செட் பண்ணிட்டோம்ல..

நரி நல்லார்ந்துது சுரேஷ்.. இப்படிப் பண்ணிட்டீங்களே!!!

கிவியன் said...

பார்த்தேன் பொன்ஸ், பூவ பெற்றுக்கொள்ளப் போகும்அந்த மஹராசன் யாரோ? நன்றாக உள்ளது.


//பதிவு போட விஷயம் கிடைக்காதப்போ// இல்லியே விஷயமிருக்கே..ஆழ்ந்து படிக்கணும்.

//நரி நல்லார்ந்துது ... இப்படிப் பண்ணிட்டீங்களே!!!// உள்குத்தா? ஒருத்தரு தாவுதுங்கிறாரு, நீங்க நரியே தேவலன்றீங்க....எல்லாம் அவன் குடுத்தது இப்ப மாத்தமுடியாது, டெம்ளேட் மாதிரி.