பூக்களை பறிக்க முடியாது

"டேய் இந்த டீய அந்தா கருப்பு சட்ட போட்டவர்ட குடு"

"அண்ணே ஒரு அஞ்சு நிமிசம்ணே பங்க்சர் போட்டுர்ரேன்ணே இப்படி உக்காருங்க"

"ஏ மூதேவி இந்த லிஸ்ட கருபண்ண கடையில குடுத்துட்டு வா"

"எல அங்க தண்ணி கேக்காங்க ஆடி அசங்சு வந்திட்டிருக்கா போல வெரசா"


என்று நாம் கேட்டு/பார்த்து பழக்கப்பட்ட அநேகம் சிறுவர்(மி)கள்[அதாவது 14 வயதுக்கு உட்பட்டவர்கள் வரும் அக்டோபர் 10ம் தேதி முதல் காணாமல் போக நேரிடும் அல்லது அடக்கி வாசிக்கப்படும்.

எனினும் இந்த சட்டம் எப்பயோ வந்திருக்கனும் ஆனா ஒரு வேள சோத்துக்கே வழியில்லாம இருந்தத பாத்துதான் இத்தனை நாட்கள் கழித்து இந்திய அரசு கொண்டுவருகிற்து. மிக வரவேற்கதக்க சட்டம். இதுக்கு ஞாநி சொல்லரதுக்கு முன்னாடியே 'ஓ' போடுவோம்.

ஆனா ஒரு சந்தேகம்: பிச்சை எடுப்பது தொழிலுங்களான்னு திருவண்ணாமலையில் குழந்தைகளை பிச்சைக்குவிட்டு வாழும் பிச்சையப்பர் கேக்குறார்?

4 comments:

பொன்ஸ்~~Poorna said...

அப்போ இனிமே பாலு கதை எல்லாம் எழுத முடியாதா?!!



நல்ல விஷயம் தான்.. ஆனா எவ்வளவு தூரம் நடைமுறைப் படுத்த முடியும்னு பார்க்கணும்..

துளசி கோபால் said...

சுரேஷூ,

காணாமப்போக நோ ச்சான்ஸ்.
எல்லாத்துக்கும் நாலு வயசு ஏறிடும். அவ்வளோதான்.

இந்தியவிஜயத்துலே நான் ஏற்கெனவே சொன்னதுதான்,
//காஃபி குடிச்சுக்கிட்டு இருக்கப்ப, இட்டிலி தின்ன தட்டை எடுக்க வந்த
பையனுக்கு அதிகம் இருந்தா ஒரு 11 வயசுதான் இருக்கணும்.
குழந்தைத் தொழிலாளியோ? வயசு எத்தனைன்னு கேட்டேன்.
பையன் ஒருமாதிரி முழிச்சுக்கிட்டே 17ன்னு கூசாமச்
சொன்னான். நல்ல ட்ரெயினிங் கொடுத்துருக்காங்க.//

கிவியன் said...

பொன்ஸ்,
சொந்தமா கட போட்ட பாலு பால் வடியும் பதினாலு வயது கீழ் பாலகனா? அதான் கதையில் என்னவோ குறையுதுன்னு சொன்னீங்களா?

கிவியன் said...

துளசி அதான் //அடக்கி வாசிக்கப்படும்.//னு சொல்லீட்டோம்ல நம்ம நாட்டுல சட்டம் போட்டா அத பிரிச்சு மேய தெரியாதா என்ன?