சித்திரமும் கை பழக்கம்மேலே உள்ளது ஏதோ புது மெஹந்தி டிசைன் போல தோன்றும். இது என்னவென்றால், மருத்துவமனையில் (அப்பல்லோ போன்ற ஒன்று என வைத்துக்கொள்வோம்) வேலை செய்யும், டாக்டரின் (சாதா இல்லை, அறுவை சிகிச்சை நிபுணர்) வேலை நேரத்தில், அவரது கைகளை ஒரு தட்டில் பதித்து எடுத்து, pathology லேபுக்கு அனுப்பி கிருமிகள் சோதனை செய்து அதனை புகைப்படமெத்த போது இப்படி இருந்தது. பல கிருமிகள் கைகள் எங்கும்.

கிருமிகளாலே நோயுண்டாகும். இது மிக நன்றாக ஊர்ஜிதமானதே. ஆனால் 1847ல் ஹங்கேரியில், ஒரு உள்ளுர் பிரசவ ஆஸ்பத்திரியில் ஒரு பக்கம் டாக்டர்களால் பிரசவம் பார்க்கப்பட்டது. இன்னொரு பக்கம் அப்போதைய பழக்கப்படி செவிலித்தாய்களால் பார்க்கப்பட்டது (செலவு குறைவு காரணமாக இருக்கலாம்). இதில் ஆச்சர்யம் என்னவென்றால், டாக்டர்கள் பார்த்த பிரசவங்களில் இறப்பு சதவிகிதம் செவிலிகள் பார்த்ததைவிட அதிகமாக இருந்தது. இது எப்படி என ஆராய்ந்த போது, இந்த டாக்டர்கள், முக்கால்வாசி, பிரேத பரிசோதனை சாலையிலிருந்து (கைகளை கோட்டில் அல்லது கால்சட்டை பின்பக்கம் துடைத்துக் கொண்டு) நேரட்டியாக பிரசவம் பார்க்க வந்திருக்கிறார்கள். பிறகென்ன அம்மாவுக்கும், அப்போதுதான் பிறந்த குழந்தைக்கும் கையோடு கொண்டுவந்த கிருமியை குடுத்துவிட்டு செல்வார்கள். அதனாலேயே இறப்பு அதிகம் என கண்டுபிடித்தனர். உடனே டாக்டர்கள் இனி பிரசவம் பார்க்கும் முன் கைகளை கழுவவேண்டும் என உத்தரவு போட்ட பின் இறப்பு சதவிகிதம் அடியோடு குறைந்து போனது.

ஆனால் 2006லும், ஆஸ்பத்திரி போய்ட்டு வந்த பின்னாடி, அல்லது நோயாளிக்கு துணைக்கு இருந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். இந்தியாவில் இல்லை, மிக முன்னேறிய அமெரிக்காவில். இதற்காக சோப்பு விற்ற கதையை இங்கே படிக்கலாம்.

மேற்படி புகைப்படத்தை ஒரு ஆஸ்பத்திரியில் மருத்துவர்களின் கணிணி ஸ்க்ரீன்-சேவராக வைத்துள்ளார்கள், கைய கழுவு டாக்டரே என்று ஞாபகப்படுத்த. இது டாக்டர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்க்குமே. ஒரு விஷயம் தெரியுமா, அலுவலகத்தில் கிருமிகள் மிக அதிமாக் காணப்படும் இடம்?
கீ-போர்டும், மெளசும் டாய்லெட்டை விட ஜாஸ்தி. கை கழுவுவதில் சோம்பேறித்தனம் வேண்டாம்.

3 comments:

பழூர் கார்த்தி said...

//அலுவலகத்தில் கிருமிகள் மிக அதிமாக் காணப்படும் இடம்?
கீ-போர்டும், மெளசும்//

அதிமாக் - அதிகமாக ?

அதுசரி, எப்ப்டிங்க கீ-போர்டு, மவுஸ்ல கிருமிங்க நிறைய இருக்கும் ?

//கை கழுவுவதில் சோம்பேறித்தனம் வேண்டாம்.//

சோம்பேறி என்ற வார்த்தையை நீங்க பயன்படுத்தியதற்காக எனக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் :-))0

வெங்கட்ராமன் said...

நன்றி நன்பரே
உங்கள் நல்ல தகவலுக்கு.

எல்லோருக்கும் தேவையான நல்ல தகவல்.

கிவியன் said...

ஸ்வாமி, உன்பது, உறுஞ்சுவது(அதாவது டீ) என எல்லாமே கணினியில்ல உட்கார்ந்த இடத்துலயே நடக்றதுனால சுத்தம் சற்று கம்மி. அதனால்.
ராயல்டி...ஆஹா கிளம்பிட்டங்கய்யா கிளம்பிட்டாய்ங்க..

நன்றி வெங்கட்.