ஆலடி அருணா சிவாஜியான கதை....

அதோ வருகிறது இதோ வருகிறது என்றுஒரு வழியாக ஆறிப்போன பஜ்ஜி மாதிரி கேள்விப்பட்டே முழுப்படத்தையும் பார்த்துவிட்ட சிவாஜி படத்தை அதிக செலவு என்று 350 பேர் அமரக்கூடிய விக்டோரியா பல்கலைக்கழக மெமொரியல் தியேட்டரில நேற்று இரண்டு(!!?) காட்சிகள் திரையிட்டார்கள்.

நாலு பேர் எங்க கூடினாலும் கடைசியில் "சிவாஜி எப்ப போடறாங்கன்னு?" பேச்சு வந்து நிக்கும். ஒரு மாசமாய் மக்கள் பாவம் காத்துக்கிடந்தார்கள். உலக கோடில இருக்ற நியுஸிலேயே இப்படி ஒரு பில்ட் அப்பு. போன்ல கூட "அதிருதுல்ல" அப்டீன்னு பேசரமாதிரி கிட்டத்தட்ட ஒரு ஃப்ளூ காய்சல் போல் பரவிட்டது.

நாற்பதாயிரம் டாலர்கள் கொடுத்து பொட்டியை நாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். 12 லட்ச ரூபாய்கள். ஆக்லேண்டில் 4 காட்சிகள், வெலிங்டனில் இரண்டு காட்சிகள் என்று பார்த்தாலும் வேறு எந்த தமிழ் திரைப்படத்திற்கும் இல்லாத அதிக விலை. வசூலாயிற்றா என்று தெரியவில்லை.

எண்ணி எழுநூறு தமிழ் குடும்பங்கள் (ஈழமும், இந்தியாவும் சேர்த்து) இருக்கும் வெலிங்டன்னில் அன்றுதான் அனைவரையும் ஒரு இடத்தில் பார்க்க முடிந்தது. இதுதான் சிவாஜியின் மிகப்பெரிய வெற்றி.

ஹாலிவுட்டில் கூட ஜானாதிபதியே நேரடிடாக சண்டை போட்டு நாட்டை காப்பதுவது மாதிரி (Independance day, Air force one etc..) "கேணத்தனமா லாஜிக்கெல்லாம் பாக்காம ஜாலியா படம் பாரு நைனான்னு" டெக்னிக்கலா ஒரு ஒன்ரமணி நேரம் எப்படி போச்சுன்னு தெரியாம கண்ண கட்டிடுவாங்க அதே மாதிரிதான் சங்கரும் ரஜினியும் மூணு மணிநேரம் பண்ணுறாங்க. அனா இதுக்காக இரண்டு வருஷமா? டூஊ மச்.

படத்த பாத்தப்புறம்தான் புரிஞ்சுது இதுக்கான கரு 2004ல சங்கருக்கு கிடைச்சிருக்கு. 2004 டிசம்பர்ல ஆலடி அருணாங்கர ஒரு அரசியல் புள்ளிய போட்டு தள்ளினாங்க. ஆனா சுனாமினால மக்கள் அத மறந்துட்டாங்க. அதே மாதிரி இத மணியும் கவனிக்காம போய்டார். ஆனா சங்கர் இத சட்டுன்னு கவனிச்சுட்டாரு. அப்டி இப்டி ரஜினிய ஒத்துக்கவெச்சு நச்சுனு இப்ப "சிவாஜி".

ஆலடி அருணா எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.
சிவாஜியும் அப்படியே. ஆலடி மக்களுக்காக கல்வி நிலையங்களை நிறுவினார். சிவாஜியும் டிட்டோ. தொழில்ல போட்டியாகீரானேன்னு ராஜா ஆலடியை வெட்டிக் கொலை செய்தார். ஆதிசேஷனும் சிவாஜியை சுட்டு தள்ளுகிறார். ஆனால் சிவாஜி எம்ஜியாரகி மீண்டு வருகிறார் (ஆனால் ஆலடி அப்படியெல்லாம் வர முடியாது). இது தாங்க கதை. நடுவுல விவேக், கறுப்பு பணம், லஞ்ச ஒழிப்புன்னு ஒரே தமாசு வேற.

ஆனா முக்கியமான ஒண்ணு என்னன்னா ரஜினி முன்னாடி எல்லாம் சிகரெட்ட தூக்கி போட்டு ஸ்டைல் பண்ணுவாரு இந்த படத்துல சிக்லெட். பரவாயில்ல மருத்துவர் மகன் சொன்ன்னதாயிருந்தாலும் நல்ல விஷயத்த கடைபிடிச்சிருக்கார்.

முஸ்லீம எப்படி ஹவாலாவாதிகள் மாதிரி காட்டலாம், மருத்துவ்ர் மாவட்டமான தர்மபுரிய மட்டும் "இப்படி இருக்கரத சிவாஜி அப்படி ஆக்கிருவாருன்னு" எப்படி உள் குத்துவுடலாம்னு எல்லாம் அவிங்க ஒரு இழவெயும் யோசிக்காம எடுத்ததெல்லாம் ஒரு பிரச்சானையாக்கி படத்துக்கு ஒரே அட்வர்டைஸ்மென்ட் வேற. தோட்டாவையும் ஷ்ரேயாவைய்ம் மிகச்சரியாக உபயோகிக்க தெரிந்த சங்கர் ஒரு கில்லாடி லேவாதேவிக்காரர்.

இவர் மெசேஜ பாத்துட்டு, ப்ளாக்ல டிக்கெட் விக்கலாமா, சங்கர், ரஜினியிடம் கறுப்புபணமெ இல்லயான்னு வெள்ளாந்தியா கேள்வி கேட்டுக்கிட்டிருந்தா அதுக்கு அந்த ஆலடி அருணாதான் வந்து பதில் சொல்லணும்.

7 comments:

Tulsi said...

நமக்கு இப்படி பாக்கற பாக்கியம்(?????) இல்லேன்றதாலே கண்ணியத்தோடு பொறுமை & பெருமையோடு காத்திருக்கோம்.

இப்பவே ஒரு 200 பவுனுக்கு அணிஞ்சாச்சு.
எதை?

பொறுமை என்னும் நகையை:-)

Chinna Ammini said...

அப்படிப்போடு அருவாள‌

கிவியன் said...

உள்ளுர் வட்டம் ஒரு வழியா ஒண்ணா பின்னூட்டம் விட்டு நம்ம குழுவ ஆதரிச்சதுக்கு ரொம்ப நன்றி. சி.அ இப்ப பதிவெல்லாம் ஒழுங்கா போட ஆரம்பிச்சுடீங்க, தொடருங்கள் வாழ்த்துக்கள்.

kumaresan said...
This comment has been removed by a blog administrator.
kumaresan said...

வாங்க கிவியன்
உங்க வலைப் பதிவைத் திறந்து பார்த்தேன்.
சிவாஜியால ரொம்பவும் பாதிக்கப் படாதவங்க
பட்டியல்ல நீங்களும் இருக்கிறதப் புரிஞ்சிக்கிட்டு
ஆறுதலும் மகிழ்ச்சியும் அடைஞ்சேன்.
உலகளாவிய நட்பும் தோழமையும் இந்த வலைப்பதிவு
ஏற்பாட்டில் கிடைப்பது பரவசம் ஊட்டுகிறது.
உங்க மற்ற கட்டுரைகளையும் படிக்கிறேன்.
எனது ‘அசாக்’ வலைப்பதிவையும்
http://asakmanju.blogspot.com
பாருங்க. உங்க
கருத்தைப் பகிர்ந்துக்கிடுங்க.

அ.குமரேசன்

Subramanian said...

ஃபேவரைட் புத்தகம் டிக்ஷனரியா!!எனக்குத் தெரிஞ்சு நான் ஒருத்தந் தான்னு நினெச்சுட்டிருந்தேன்.நீங்களுமா?

துளசி கோபால் said...

மொதல்லே எங்க வாழ்த்து(க்)களைப் பிடியுங்க, வெற்றிகரமா வந்து ஜோதியில்
கலந்ததுக்கு.