நடந்தவை நடப்பவை-5

தொலைபேசி வர்த்தக நாகரீகம்


கிட்டதட்ட ஒரு மாதமாக "க்ளோபல் டெலிலின்க்" என்கிற ஒரு குறைந்த செலவில் அயல் நாட்டு தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனத்திலிருந்து அவர்களது சேவையில் சேருமாரு தொலைபேசி மூலம்,சரியாக வேலை முடிந்து வீட்டுக்கு வந்து சேரும் 6 மணிக்கு அழைப்பு வரும். இதுவரை 5 முறை ஃபோன் வந்தாயிற்று. இந்த சம்பாஷனை இப்படி போகும்: (ஆங்கிலத்தில்தான் ஆனால் இங்கு தமிழாக்கம்)


மணி அடித்து ஃபோனை எடுத்து ஹலோ என்றவுடன்,

" ஹலோ நீங்க யாரு பேசரது?

(அடிப்படை தொலைபேசி நாகரீகமில்லாத கடுப்பேற்றும் ஒரு கேள்வி)

"நீங்கதான் ஃபோன் பண்ணுனீங்க யாரு நீங்க? உங்களுக்கு யாரு வேணும்?"
(இது என் மனைவி)

"------ இருக்காரா ஃபோன அவர்ட குடுங்க"
(ப்ளீஸ் போன்ற பண்பு எல்லாம் இல்லாமல் ஒரு அதிகார தோரணை)

"ஹலோ ----- பேசரேன் "

"ஹலோ நான் க்ளோபல் டெலிலின்க் பெங்களூருலிருந்து பல்லவி பேசறேன்......
ப்ளா ப்ளா ப்ளா....எங்க சேவை உங்களுக்கு மிக அவசியம் (அட எனக்கு தெரியாம போச்சே) உங்க க்ரெடிட் கார்டு டீடெயில் குடுங்க..."

எடுத்த எடுப்பிலேயே ஒரு இரண்டு நிமிடங்கள் எதிரிலிருப்பவரை பேச விடாது கிளிப்பிள்ளை மாதிரி ஒப்பித்து கடைசியில் க்ரெடி கார்டு நம்பரை கேட்கிறார்கள். மிகவும் மெனக்கெட்டு பயிற்சி அளித்திருக்கிறார்கள்.

"எனக்கு இப்போது உங்கள் சேவை தேவையில்லை மன்னிக்கவும்"

"ஹலோ சார் (இப்போதுதான் பணிவு வருகிறது) நீங்க சைன் பண்ணினா போதும் உடனடியா ஒண்ணும் பே பண்ண வேண்டாம்?

"மன்னிக்கவும் நான் வேண்டாம் என்கிறேன்"

"சார் ஒரு பத்து டாலருக்காவது எடுங்க ப்ளீஸ் (முதல் முறையாக இப்போதுதான் இந்த வார்த்தை வருகிறது) ...

"இல்லை நன்றி வேண்டாம்"

எதிர் முனை "டொக்" தொடர்பை துண்டித்துவிட்டாள். நான் செய்திருக்க வேண்டியது. எனக்கு தேவைதான்.



ஒரு வாரம் கழித்து மீண்டும் ஒரு மாலை,

"ஹலோ நாங்க க்ளோபல் டெலி..." என்றவுடனேயே நான்

"ஹலோ ப்ளீஸ் கொஞ்சம் என்னை பேச விடுங்க. ஏற்கனவே சில நாள் முன்னாடி ஒருத்தங்க ஃபோன் பண்ணினாங்க, நான் வேண்டாம் என்று சொன்னேன்".

"சரி இப்ப என்ன சொல்றீங்க, நீங்க இந்த சேவைல சேருங்களேன்?"

"ஆளவுடுங்கோ, வேண்டாம்"

எதிமுனை :"டொக்"


இந்த மாதிரி மீண்டும் இரண்டு முறை மேலும் ஃபோன் வந்தது. எனககு இது ஒரு மாதிரி ஸ்டாக்கிங்கோ (stalking) என்று தோன்றியது.


ஆனால் நேற்று மீண்டும் வந்தது ஒரு உச்சம் (நீண்ட நாள் பதிவு போட நேரமில்லது போனாலும் பதிவு போட்டே ஆகவேண்டும் என்கிற அளவுக்கு):

"ஹலோ நாங்க க்ளொபல்...ப்ளா ப்ளா"

நான் மிக கடுப்புடன் "ஹலோ கொஞ்சம் என்ன பேச விடுங்க. ஏகப்பட்ட ஃபோன் உங்க கம்பனியிலேர்ந்து "......

"நா ஒரு பத்து நிமிஷம் இல்லேன்னா ஒரு அரை மணி நேரம் கழித்து ஃபோன் பண்ணவா"

மிக மிக கடுப்பாகி "Dont try to snap me when I am trying to talk..."
நான் பேச வந்ததை பேசி முடிக்க வில்லை தொடர்பை துண்டித்துவிட்டாள்.

எனக்கென்னவோ தொடர்பை துண்டித்த பின் அந்த பெங்களுரு கால் சென்டரில் பல்லவி, ரீனா, ரித்திகா எல்லோரும் கூடியிருக்க " யாரு அந்த வெலிங்டன் சாவு கிராக்கி -----தானே? கிறுக்கன் 14 சென்டுல இந்தியாவுக்கு ஃபோன் பேசலாம் என்றால் வேண்டாம் என்குது லூசு பேக்கு" என்று ஸ்வேதா கடுப்பாகி கூறியிருக்கலாம் என்றே தோன்றுகிரது.

மும்பையில் ஒரு முறை வேலைக்கு ஆள் எடுக்கும் முகாம், அதாவது ஒரு மேளா மாதிரி, நடந்தது. அதற்கான தகுதி என்வென்றால், எட்டாம் வகுப்பு தேறியிருக்க வேண்டும் ஆனால் பண்ணிரெண்டாம் வகுப்புக்கு மேல் தேறியிருக்கக் கூடாது. இது கால் செண்டர் வேலைக்கான் தேர்வு. இந்த மாதிரி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இப்படி பயிற்சி அளித்தால் என்னவாகும்? நான் உங்கள் சேவை வேண்டாம் என்று சொல்வதையே இவர்களால் சகிக்க முடியவில்லை. ஒரு வேளை இந்த சேவையில் சேர்ந்து ஏதாவது பிரச்சனை என்றால் இவர்களது உதவி எப்படி இருக்கும் என்பது அவரவர் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.

இதை இன்னுமொருவிதமாககூட பார்கலாம், என்னதான் இருந்தாலும் இவன் இந்தியந்தானே எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்று கூட இருக்கலாம் ஒரு வகையான self loathing மாதிரி நம்ம இனம்தானே?

ஆக நியுஸி மக்கள் யாருக்காவது இப்படி ஃபோன் வந்தால் தொடர்பு துண்ட்டிப்பு பொத்தானுக்கு அருகே ஒரு விரலை வைத்துக்கொண்டு பேசுவது நல்லது. யார் முதலில் துண்டிக்கிறார்கள் பார்ப்போம் என்று கிட்டத்தட்ட ஒரு கேம் மாதிரி.

3 comments:

துளசி கோபால் said...

உங்க 'மெளனத்தை'க் கலைத்ததுக்கு அந்த க்ளோபல் டெலிக்கு நன்றி சொல்லிக்கணும்:-))))))

நமக்கு ஒரு மூணு மாசமா அநேகமா தினமும் இப்படித்தான் 'ஓவர்சீஸ் கால்ஸ்' வந்துக்கிட்டு இருக்கு.
ஆனால் எல்லாரும் ரொம்ப மரியாதைப்பட்டவங்கப்பா. டெல்லிக்காரங்க.

முதலில் கோவிச்சுக்கிட்டு எப்படியெல்லாம் பதில் சொல்லி இருக்கேன் பாருங்க.

" நான் இந்தியாவுக்குக் கால் பண்ணறதெ இல்லை. இன்னும் சொன்னா இங்கே லோகல்கால் கூடப் பண்ணமாட்டென்."

"நான் இங்கே பேபி சிட்டர். வீட்டுலே யாரும் இல்லை"

" நீங்க கூப்புட்ட ஆள் இப்ப இந்தியாவில்தான் இருக்கார்"

"எவ்வளவுக் குடுக்குறீங்க? 14 செண்ட்டா? நான் இங்கே ஸ்பெஷல் ஆஃப்ர்லே 5 செண்டுக்குப் பேசறென். நீங்க 4 செண்டுன்னா எனக்கு ஓக்கே "

எனக்கு டெலிகாம் பெக்கேஜ் டீல் இருக்கு. அதனாலெ இந்தியாவுக்கு ஃப்ரீயாவெ பேசறேன்"

இப்ப எல்லாம் யாரு பேசறா, எங்கேருந்துன்னு நான் கேட்டுக்கிட்டு, அங்கத்து வெதர், என்ன நடக்குது, அரசியல் நிலவரம்னு கேக்க ஆரம்பிச்சுருக்கேன்.

நாலுநாளா ஃபோன் வரலை(-:

நேத்து வேற நாட்டில் இருந்து ( ஆஸ்ட்ராலியா. ஆனா இந்தியக்குரல்)
'வுட் யூ லைக் டு கோ ஆன் அ ஹாலிடே?'

நோ

Anonymous said...

அவங்களுக்கு எப்படீங்க உங்க தொலைபேசி எண் கிடைச்சுது. உங்களுக்கு எதிரிங்க பெங்களூருல இருக்காங்களா என்ன‌.
இங்கே லோகல் மக்களும் சர்வே எடுக்கறேன்ன்னு போன் பண்ணுவாங்க. நான் இப்ப பிஸி. பேச முடியாதுன்னு பைபை சொல்லிட்டு டக்குன்னு போனை வைச்சிடர்தான்.

கிவியன் said...

அருமையான ரெடிமேட் பதில்களுக்கு மிக்க நன்றி துளசி, ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்பீங்க போலருக்கே.
நேத்து "வுட் யூ லைக் டு கோ ஆன் அ ஹாலிடே?' எனக்கும் வந்தது, "சாரி ராங் நம்பர்னு" வெச்சுட்டேன், எல்லாம் அங்க கத்துகறத இங்க ஆஸில உபயோக படுத்துனேன்.

சின்ன அம்மிணி, நம்பர் எப்படி கிடச்சுதா? என்ன இப்படி கேட்டுடீங்க? டாட்டா பேஸ் வியாபாரம் பற்றி கேள்விப்பட்டதில்லையா? விட்டா உங்க பேங்க் டீடெயில் கூட அவங்களால வாங்க முடியும் (ஒரு பேச்சுக்கு சொல்றேன்).