01022010

இன்றய தேதி ஒரு palindromic, அதாவது திருப்பி எழுதினாலும் அதே தேதி, விகடகவி மாதிரி.

விஷயம் ஒன்னும் இல்லேன்னா இந்த மாதிரி பதிவெல்லாம் எழுத வேண்டியிருக்கிறது.

அப்பால இந்த வார இறுதியில் ஒரு நண்பர் வீட்டுக்கு சென்றிருந்த போது அவருடைய மகன் (4 வயது) நர்சரி பற்றி பேச்சு வந்த போது, ஜனநாயக தேசம்ன்னா அதுக்காக இந்த அளவுக்கா என நொந்து கொண்டார் என்னவென்று விசாரித்தால், நர்சரியில் ba ba *****sheep ரைமில் அல்லது பாட்டில் ***** என்னும் வார்த்தை இனவேறுபாட்டை குறிப்பதாக இருப்பதால் அதை wolf என்று மாற்றி, ba ba wolfsheep என்று சொல்லித் தருகிறார்களாம்!! கொஞ்சம் ஓவராத்தான் தெரியுது என்ன செய்ய??

இந்த சின்னப் பசங்களுக்கு என்ன தெரியும்னு இப்படி மாற்றினார்கள்?? வார்த்தையளவில் மாற்றினாலும் மனதளவில் இன்னமும் இருந்து கொண்டே இருக்கும் இன வேறுபாட்டை அடுத்த தலை முறையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு மறைமுக ஏற்பாடாக இருக்குமோ?

எப்படி என்றால் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்காக நாலு பேர் கூடுமிடத்தில் குழந்தையை பெருமையாக `அங்கிளுக்கு பாட்டு பாடி காட்டு` என்று சொல்ல உடனே `ba ba wolfsheep` என்று அந்த குழந்தையும் பாட, நாங்கள்லாம் அந்த காலத்துல `*****`ன்னுதான் பாடினோம் இப்ப உங்களுக்கு wolfன்னு மாத்திட்டாங்க என்று அந்த சின்னஞ்சிறுசுகளிடம் சொன்னா அவர்கள் குறைந்தது பத்து கேள்வியாவது கேட்ப்பார்கள், பின்ன அதுக்கு விளக்கம் சொல்லப் போனா இனவேறு பாட்டுக்கான விதை அப்போதே பதிந்து விடுமே!


பிகு:***** என்று சொல்வது சனநாயக முறைப்படி தவறென்பதால் ***** என குறிப்பிட்டிருக்கிறேன். தலை சுற்றுகிறவர்களுக்கு, காக்கையின் நிறத்தை ஆங்கிலத்தில் இட்டு வாசிக்கவும்.

3 comments:

சின்ன அம்மிணி said...

எ. கொ.ச :)

கிவியன் said...

எ.கொ.ச வென்றால்?

என்ன கொடும சரவணாவா? இல்ல சாரா?

எதா இருந்தாலும் இவிங்க இப்படி மாத்துரது பெரும் கொடுமைதான்.

துளசி கோபால் said...

எனிட் ப்ளைட்டன் கதைகளில் வரும் கோலிவாக் இனவேற்றுமையைக் குறிக்குதுன்னு இப்ப அந்த பொம்மைக்கும் ஆப்பு வச்சுட்டாங்க.

நிறம் அதே காக்கைதான்.

ஆமாம் அது க்ரே தானே?:-))))