போதாகுறைக்கு நான்காம் வகுப்பில் படிக்கும் போது இதே சட்னியை இட்லியுடன் மதிய உணவாக டிபன் பாக்ஸில் கொண்டுவந்ததாகவும் அதை நான் சாப்பிட்டு பார்த்து மிகவும் விரும்பியதாகவும் வேறு பின்னூட்டம் போட்டிருந்தான். நமக்கு முந்தா நேத்து என்ன சாப்பிட்டோம்னே நெனவு இல்ல இதுல நாலாம் கிளாஸ் மதிய டிபன் என்றால் என்ன ஞாபக சக்தியப்பா?
சரி இவ்வளவு சொல்றானேன்னு இப்ப இத செய்து பார்த்துவிடலாம்னு இந்த நீண்ட வார இறுதியில் (இதுக்கெல்லாம் நீண்ட வார இறுதி வேணுமாக்கும்னு எல்லாம் கேட்க்கப்டாது)..இதோ அந்த சட்னி செய்முறை: நண்பனின் குறிப்புகளுடன்(நீல நிறம்) என் படமும் :
இஞ்சி சட்னி ரெசிபே :(Ginger chatny Recipe)
1)சிறிதளவு இஞ்சி தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும். (சிறிதளவுன்னா எவ்வளவுப்பா??)
6 nos ரெட் சில்லி 3 கைப்பிடி அளவு கடலை பருப்பு
தக்காளி 4 அல்லது 5 பொடியாக நறுக்கி கொள்ளவும்
2)வாணலியில் சிறிது ஆயில் விட்டு கொதித்தவுடன் இஞ்சி அண்ட் கடலை பருப்பு போட்டு பருப்பு பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும் பிறகு தக்காளி போட்டு நன்றாக வதக்கவும் உப்பு தேவையான அளவு சிறிது பெருங்காயம் தூள் போடவும்
5-7 மினிட்ஸ் ஆனவுடன் கொஞ்சம் கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிது புதினா போட்டு
இறக்கி வைத்து ஆறியவுடன் மிக்ஸி யில் போட்டு அரைக்கவும்.
3)வாணலியில் கொஞ்சம் ஆயில் (refined or gingely oil ) விட்டு கடுகு உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும் மிக்சி யில் உள்ள சட்னி அரவை எடுத்து வாணலியில் ஊற்றி கிளறி கொண்டே இருக்கவும் நன்றாக கொதிக்க கொதிக்க சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதி வந்தவுடன் இறக்கி வைக்கவும்.
4)சுவையான இஞ்சி சட்னி ரெடி. (பி கு)காரம் அதிகம் வேண்டுமானால் ரெட் சில்லி 2 எக்ஸ்ட்ரா சேர்த்து கொள்ளலாம்.
குற்றம் குறை இருந்தால் சுட்டி காட்டவும்
மேலே சொன்ன குறிப்புகள் அனைத்தும் நண்பன் சொன்னது. சொன்னது போலவே செய்ததில் மிகவும் சிறப்பாகவே வந்தது. ஆனால் சற்று இஞ்சியின் துவர்ப்பு (அ) கசப்பு இருக்கிறது. தக்காளியின் அளவை கூட்டினால் சரியாக வருமோ என்னவோ அடுத்தமுறை சோதித்துப்பார்க்க வேண்டும்...
2 comments:
இந்த இஞ்சி மேட்டர் எனக்கு ஒத்து வராது!
தயிர் சாதத்துல சின்ன சின்னதா வெட்டிப் போடுவாங்க. அது கரெக்ட்டா என் பல்லுல மாட்டும்! அவ்வளவு தான், சாப்பிடற மூடே போயிடும்.
நல்லா வந்திருந்தா சரி. என்சாய் :-)
உனக்கு இஞ்சி புடிக்காதுன்னு நல்லா தெரியுது இல்லேன்னா //சின்னதா வெட்டிப் போடுவாங்க// இப்படி என்னவோ ஆட்டயோ மீனையோ போட்டா மாதிரி எழுதியிருக்க மாட்டே.
நல்லா வந்திருந்ததாவா, பிரமாதம்பா! அதனால இந்த வார இறுதில இஞ்சிய ”நறுக்கி” அவசியம் செய்து சாப்பிட்டு பார்க்கவும்
Post a Comment