Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

சரியாதான் வெடிச்சுது

சின்ன வயசுல தீபாவளிக்கு அவுட், ஆட்டம்பாம் எல்லாம் அப்படியே வெறும் தரையில் பத்த வெச்சு வெடிச்சா ஒரு எஃபெக்ட் இல்லாம போகும். அதனால கொட்டங்குச்சி, தகர டப்பா (மஞ்சள் பின்னனியில் பச்சை பனமரம் போட்ட டால்டா டப்பா மிகச் சிறந்தது), தெருவில் சிமெண்ட் குப்பைத்தொட்டி இருந்தால் அது விஷேசம். வீட்டுக்கான அஸ்திவாரத்துக்காக தோண்டிய குழியிருந்தால் மிக மிக சிறந்தது. ஆக ஒண்ணுமறியா விடலை பருவத்தில் சிவகாசி வெடியை வெச்சு இவ்வளவு `ஆராய்ச்சி ` செஞ்ச்சிருக்கோம்னா நெசமாவே அணுகுண்டு வெடிக்கனும்னா எவ்வளவு ஆராய்ச்சி செஞ்சிருக்கணும்??

அதத்தான் சமீபத்துல சந்தானம் கேட்டாரு. ஏம்பா இப்படி 11 வருஷம் கழிச்சு இப்படி சொல்லறியேன்னு எல்லோரும் கேட்டாங்க. இவருதான் அந்த குண்டு வெச்ச குழிக்கு பொறுப்பாளரா இருந்தாரு. ஆனா பாருங்க இப்பதான் அந்த அணுகரு இணைதல் குண்டு (Fusion) மாத்திரம் சரியா வெடிக்கலன்னு சந்தேகம் வந்திருச்சு.

இப்ப ரெண்டு பக்கம் ஆகிப்போச்சு. பல முன்னாள், இன்னாள் மற்றும் எதிர்கால பத்ம விபூஷன்கள் கடுப்பாகி கை சட்டையை உருட்டி விட்டு அதெல்லாம் சரியாதான் வெடிச்சது இனிமே மேற்கொண்டு வெடிச்சு பார்க்க தேவையே இல்ல அப்படின்னு அறிக்க மேல அறிக்க விட்டாங்க இன்னும் விட்டுக்கிட்டே இருக்காங்க. 1998ல வெடிச்சதுலேயே எக்கசக்கமான தரவுகள் (data) கிடச்சுட்டதால, அதவெச்சு இதவிட பெரும் வெடி செய்யர அளவுக்கு நாங்க கணனிலேயே ஒப்பியக்கம் (simulation) செஞ்சு இருக்கோம்ங்கறாங்க. இன்னொரு பக்கம் ஒரு பத்மஸ்ரீ, அதுகூட வேண்டாம், ஒரு அரசாங்க செக்ரட்டரி பதவி கூட கிடக்காத மத்த விஞ்ஞானிகள் சந்தானம் சொல்லரது சரிதான் அரசாஙகம் இத ஒரு கமிட்டி போட்டு மறு விசாரனை பண்ணனும்ங்கறாங்க.

விஞ்ஞான ஆராய்ச்சியில் சில சமயம் பல குழுக்கள் தங்களது முடிவுகளை வெளியிடும் போது தரவுகள் (data) ஒத்துபோவதற்காக கொஞ்சம் பிழை-விழுக்காடுகளை சேர்த்துக்கொள்வது மிக இயல்பானது. ஆனால் எந்த அளவுக்கு என்பது அந்தந்த விஞ்ஞானியின் நேர்மையை பொறுத்தது. ஆக பத்து அடி குழியை 40 அடி இருக்கலாம் என காட்ட வழியிருக்கிரது. அட ஆராய்ச்சில இதெல்லாம் சகஜம்பான்னு சொல்லும் விஞ்ஞானிகள் பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனா இப்ப பிரச்சன சரியா வெடிச்சுதா இல்லயாங்கரது இல்ல. மிக நுட்பமா பாத்தா இதுக்கு பின்னாடி இருக்கக் கூடிய சாத்திய கூறுகள் அசாத்தியமானது.
இப்படி இருக்கலாம். கணனில சிமுலேஷன் பண்ணி பாத்தா ரொம்ப டவுட்டா இருக்கே இத நம்பி நாம ரொம்ப சவுண்டு விட்டுட்டோமோன்னு கைய பிசிஞ்சு இப்ப நிலம CTBTல கையெழுத்த போடுன்னு அமெரிக்கா காரன் வந்து நிக்கிரானேன்னு முழிபிதுங்கி யோசன பண்ணப்போதான் இந்த ஐடியா தோணுச்சு. யாராவது சரியா வெடிக்கலேன்னு கம்ளெயிண்ட் பண்ணனும், அதான் சாக்குன்னு ஒரு கமிட்டிய போட்டு அது முடிவு சொல்லர வரைக்கும் நாங்க CTBTய தொட்டுகூட பாக்க மாட்டோம்னு அறிவிச்சுடலாம். இல்லே போனா போகுதுன்னு இன்னும் இரண்டு வெடிச்சு பாக்கலாம். இப்படி வெட்டிச்சா அமெரிக்கா மேலும் பிரச்சன பண்ணும், இத வெச்சு அரசியல் கட்சியெல்லாம் ஆளாளுக்கு பிரச்சனைக்கு தீர்வுன்னு கிளம்பிருவாய்ங்க அப்புறம் அத வெச்சு தேர்தல முன்ன பின்ன கொண்டு வரலாம் அரசாங்கத்த மாத்தலாம்.....அஹா என்னவெல்லாம் சாத்தியம்...

அப்பா சந்தானம் பத்த வெச்சுட்ட.... இது வெடிக்குமா? இல்ல புஸ்ஸா?? பொருத்திருந்துதான் பாக்கனும்.

தே.மு.தி.க உதயம்

தோற்றம்: 14 செப்டம்பர் 2005

(இதுக்கு அப்புறம் ஒண்ணு எழுதனும் அத அப்புறமே எழுதிக்கலாம்)


புகைப்படம்: நன்றி தினமலர்.


யார வெட்டப்போறாரோ??

வரப்போறரய்யா வரப்போறாரு..

பொன்மொழிகள் பத்து







செப்டம்ப்ர் 14

"இனிமேல் அந்த நாள் தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான நாளா மாறிடும்"!

"நம்பிக்கைதானேங்க வாழ்க்கை"!

"எனக்கு அரசியல் தெரியாதுன்னு சொல்றவங்களைப் பார்த்து சிரிப்புதான் வருது"!

"எல்லா கட்சிகளையும் எல்லா தலைவர்களையும் நம்பி ஏமாந்து மக்கள் சலிச்சுட்டாங்க"!

"நான் பெண்டாட்டிகூட போகாம மத்தவங்ககூட போனாதான் அது தப்பு"!

"என் பிரச்னையையே என்னால தீர்துக்க முடியலைன்னா அப்புறம் மக்கள் பிரச்னையை எப்படி தீர்பேன்"!

"இதெல்லாம் பொது வாழ்க்கைக்கு கொடுக்கற விலை"!

"கல்யாணம் பண்ணிப்பார் வீட்டைக் கட்டிப் பர்ரனு சொல்லுவாங்க. கட்சி தொடங்கிப்பார் மாநாடு நடத்திப் பார்ங்கிறாதையும் அதோடு சேர்த்துக் கலாம்னு தோணுது"!

"நாமெல்லாம் ஜெயிக்கப் பொறந்தவங்க"!

"மத்தவங்க சரிய பண்ணலைனு குறை சொல்லிட்டே இருக்கிறது பழைய ஃபேஷன்"!

இதெல்லாம் யாரு சொன்னாங்கோ அதுக்கு கரீக்டா இன்னா அர்த்தம்னு சொன்னா
செப்டம்பர் 14 மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவில்ல பொத்தாமறை குளத்துல வச்சு பொற்க்கிழி கொடுக்கப்படும்.

ஆஸ்த்ரேலியா - இந்தோனேஷியா பகையும்..

அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்த மாதிரி ஆஸ்த்ரேலியா இந்தோனேஷியா மீது படையெடுத்தால் அது ஆச்சர்யபடுவதற்க்கில்லை. அந்த அளவுக்கு சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 4-1/2 கிலோ போதை பொருள் வைத்திருந்ததாக ஷப்பெல் கோர்பி என்ற 27 வயது ஆஸ்த்ரேலிய பெண் கைது செய்யப்பட்டு மே 28ம் தேதி 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். இதை நேரடியாக TVல் ஒலிபரப்பப்பட்டபோது ஆஸ்த்ரேலியாவே அந்த 5 நிமிடங்களுக்கு ஸ்தம்பித்துப் போய் பார்த்துக்கொண்டிருந்ததாம்.

இது சரியா தவறா என்று சிண்டை பிய்துக்கொண்ட்டு விவாதிக்கிறார்கள். ஒட்டு மொத்த ஆஸ்த்ரேலியர்களும் இந்தோனேஷியாவை புறக்கணிக்க வேண்டுமென்கிறார்கள். இதன் மூலம் இந்தோனேஷியா மீது மேற்கத்தியர்கள் கொண்டுள்ள அபிப்ராயம்:


1. நாணயமற்ற அரசு
2. படிப்பறிவில்லாத மக்கள்
3. ஊழல் நிறைந்த நாடு
4. போலிசும் நீதிமன்றமும் நேர்மையில்லாதது, ஊழல் நிறைந்தது.


ஆகவே மக்களே (மேற்கத்தியர்களுக்கு) இந்த லீவுக்கு பாலி போகலாம்னு இருந்தியா? வேண்டாம். ஆஸ்த்ரியாவோ, லிஸ்பானோ இல்லை பாரீசுக்கோ போங்களேன்னு உபதேசம் செய்கிறார்கள். இப்பத்தான் சுனாமி வந்து ஒரு வழியாக மீண்டு கொண்டிருக்கிறார்கள். சுற்றுலாவை நம்பியிருக்கும் ஒரு நாடு. இந்த மாதிரி கண்மூடித்தனமாக ஒரு நாட்டை பகிஷ்கரித்தல் சரியா? அங்குள்ள ஹோட்டல் தொழிலாளியோ, கைவண்டி இழுப்பவனோ, டாக்ஸி ஓட்டுபவனோ இவர்களை என்ன செய்தான்?

இதன் பின்னனி என்ன?போதை பொருள் வைத்திருந்ததால் மரண தண்டனை. இது இந்நாட்டின் மிகதெளிவாக அறிவிக்கப்பட்ட சட்ட விதி. கோர்பிக்கு அளித்த நீதி வாக்குமூலம் கூட நிரபராதி என்று நிரூபிக்கும் வரை (Guilt until proven inocence) என்றுதான் குறிபிடுகிறது. அனால் கோர்பி எப்படி நிரூபிப்பார் அதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

அஸ்த்ரேலியாவிலோ, அமெரிக்காவிலோ 4-1/2 கிலோ போதை பொருளை எடுத்துக்கொண்டு போய் கையும் களவுமாக பிடி பட்டால், "இல்லீங்க ஏதோ எனக்கே தெரியாம நடந்து போச்சுன்னு" சொன்னா அங்க உள்ள ஜட்ஜு "சரிடா கண்ணா இனிமே பாத்து நடந்துக்கோன்னு" அனுப்ச்சுடுவாங்களா?இதனால ஒரு நாடுட்கெதிராக கண்டமேனிக்கும் வசை பாடுவதும், அங்கு உள்ள மக்கள் மொத்தமாக கேவலமானவர்கள் என்றும் சொன்னால் அது சரியாகுமா?

இவுங்களுக்கு (மேற்கத்தியர்) இவுங்க ஊர்ல காக்கா தலைகீழா பறக்கும்னு சொன்னா நியாயம். இதையே பக்கத்து ஊர்க்காரனும் சொன்னான்னா அவிங்கெல்லாம் காட்டுவாசிங்க. இவிங்களும் இவிங்க மேண்மையும்...ஹும்.

மீண்டும் சுனாமியை சுற்றி...

இது சுனாமி முன்னறிவிப்பு பற்றி,

ஏற்கனவே பலரும் இதைப்பற்றி எழுதிவிட்டாலும், சமீபத்திய இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கை மிகவும் கேள்விக்குரியதாக உள்ளது. சுனாமி முன்னறிவிப்பு சாதனம் தயாரிக்கும் திட்டதிற்க்காக அண்மையில் விஞ்ஞானிகளும் அதிகாரிகளும் விவாதித்து இரண்டு வருடங்களில் இதற்க்கான மென்பொருளையும் அதாவது a model, மேலும் வன்பொருளையும் செய்துவிடலாம் என்று ஒர் தீர்மானத்தை கொடுத்துள்ளனர். இது எவ்வாறு சாத்தியம் என்று புரியவில்லை. அமெரிக்காவும் ஜப்பானும், 20 - 30 வருடங்களாக சேகரித்த புள்ளிவிவரங்களை உபயோகித்து சுனாமி முன்னறிவிப்பு சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.

இங்கே என்ன பிரச்சினை என்றால், இந்தியா தானே தனித்து இதனை உருவாக்கிக்கொள்ளும் என்றும் மற்ற நாடுகளின் உதவி தேவை இல்லை என்னும் கொள்கையை இந்த தொழில் நுட்பத்திற்கு கடைபிடிப்பதுதான். இதைப்பற்றி வருத்தப்பட்டு Costas Synolakis என்னும் அமெரிக்க வல்லுனர் Nature, 03/03/2005, Vol. 434 Issue 7029 இதழில் கடிதம் எழுதியுள்ளார்.

சுனாமி முன்னறிவிப்பு என்பது, எல்லை அல்லது வின்வெளி பாதுகாப்போ போன்றது அல்ல. பசிபிக் சுனாமி முன்னறிவிப்பு மையத்திலிருந்து டிசம்பர் 26 அனுப்பப்பட்ட முன்னறிவிப்பு சரியாக கையாளப்படாதது பற்றி யாவரும் அறிந்ததே. வானொலி, தொலைகாட்சி மூலமாக கரையோரம் உள்ளவர்கள் சற்று பாதுகாப்பாக இருக்கவும் என்று ஒரு செய்தி 26ம் தேதி ஒலிபரப்பப்பட்டிருந்தால் குறைந்தது ஒரு 40,000 மக்களை காப்பாற்றியிருக்கலாம் என்று கருதப்படுகிரது. இப்படி உயிர்க்காகும் தொழில்நுட்பத்தில் இந்த மாதிரியான கொள்கை தேவைதானா? இந்தியாவின் தன்நம்பிக்கை உயர்ந்ததுதான். இந்தியரின் திறனையும் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், எதில் தற்ச்சார்பையும் (self-dependent) எதில் கூட்டுறவையும் கடைபிடிப்பது என்பதில் ஒரு நாட்டுக்கு தெளிவான கொள்கை வேண்டும்.

இப்படி ஒரு முடிவெடுப்பதென்பதற்கு என்ன பின்னனி என்று பார்க்கும் போது, சுனாமி நிகழந்த பின் இந்திய அரசு உடனடியாக இந்தியாவில் சேதமடைந்த இடங்களுக்கு உதவி அனுப்பியதோ இல்லையோ, தன் கப்பல் படையை இலங்கைக்கு அனுப்பியது. ஆசியாவில் தான் ஒரு பெரும் வல்லரசு என்று நிருபிக்க ஒரு வாய்ப்பாக அமைந்தது. அமெரிக்கா தன் கப்பற்படையை இலங்கை வரை விரிக்க இந்தியா விரும்பவில்லை. இருப்பினும் அமெரிக்கா அனுப்பியதும், என்ன செய்வது என்று கையை பிசைந்து பார்த்துக்கொண்டிருந்ததும் மறைமுகமாக நடந்தேரியது. இதுவே, இந்தியாவின் சுனாமி பாதிப்பை தானே கையாளும், வேற்று நாட்டின் உதவி தேவையற்றது என்று அறிப்பு வெளியிடும் அளவுக்கு சென்றது. அதன் தொடர்ச்சியாக இப்போது சுனாமி முன்னறிவிப்பு திட்டதிலும் எதிரொலிக்கிரது. இந்த மார்தட்டலை வரட்டு ஜம்பமாக கொள்வதன்றி வேரென்ன சொல்வது? மக்களின் உயிர்ப்பிரச்சினை என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும் போது இதனை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கருதுகிரேன்.