Showing posts with label நட்சத்திர பதிவு. Show all posts
Showing posts with label நட்சத்திர பதிவு. Show all posts

இன்னிக்கு மேடைய காலி பண்ணனும்..

அடுத்த நட்சத்திரம் காத்திருக்கிறார்....

என்னத்த எழுத என்று 6 நாட்கள் ஓடி விட்டது. அவ்வளவாக பின்னூட்டமே விடாதவனுக்கு பின்னூட்டங்கள் வேறு.

வலைபதிவு எழுதுவது வெட்டி வேலையா? இல்லை என்றே தோண்றுகிறது. இதனால் எனக்கு என்ன நன்மை என்றெல்லாம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாது தொடங்கியதுதான். நிறைய யோசிப்பவன் ஆனால் எதையும் யாரிடமும் சொல்லவதில்லை. எனக்கு நான் சிந்திப்பதை ஒர் இடத்தில் எழுதிவைக்கும் ஒரு நல்ல வடிகால் வலைப்பதிவு. நான்கு வருடங்கள் தாண்டியும் வலைபதிவு எழுதுவது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது.

இதை படித்துக்கொண்டிருக்கும் உங்களை போன்ற முகமரியா வாசகரை சென்றடைய முடிகிறதே இதைவிட வேறு என்ன வேண்டும்?

உங்கள் வருகைக்கும் என்னை நட்சத்திரமாக்கி ஒரு சந்தர்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்மணத்துக்கும் என் நன்றிகள் பல.

எனக்கும் எனக்கு முன்னால் நடசத்திரமானவர்களுக்கும் ஊக்கமளித்ததை போல வர இருக்கும் நட்சத்திரங்களுக்கும் உங்களின் ஆதரவு பல நல்ல பதிவுகளை வெளிக்கொண்டுவர நிச்சயம் உதவும்.

என் வலைக்கு வந்தவர்கள் நாளையும் என் வலைக்கு வருவீர்கள என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்..

எடின்பரோ நகர்வலம்

இந்த ஊரை சேர்ந்த தற்கால எழுத்தாளர் ஜே. கே ரெளலிங்கை பற்றி எழுதாவிட்டால் ஹாரி பாட்டர் ஏதாவது மந்திரம் போட்டு அப்புறம் நான் பதிவே எழுத முடியாம போயிடகூடும் இல்ல வலைபதிவவெல்லாம் படிச்சு மனநோய் வந்துடும்.

எந்த ஒரு எழுத்தாளரும் இவர் அளவுக்கு தன் எழுத்து மூலம் சம்பாதித்ததில்லை. ஒரு 13 வருடம் பின்னால் சென்று பார்ப்போம். வாரம் £70 பவுண்டு அரசாங்கம் குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு கொடுக்கும் உதவித்தொகையில், எடின்பரோவில் உள்ள காப்பி கடையில் ஆறிப்போன காப்பி குடித்துக்கொண்டு, பக்கத்தில் ப்ராமில் மகள் ஜெஸ்ஸிகாவை வைத்துக்கொண்டு எழுதியிருக்கிறார்.

யோசித்துப்பாருங்கள் உங்களில் எத்தனை பேருக்கு ஒரு காப்பி கடையில் உட்கார்ந்து எழுத முடியும்? சரி, காப்பி கடையில் ஏன்? இவருடைய குழந்தை ப்ராமில் வைத்து தள்ளிக்கொண்டே சென்றால்தான் தூங்குமாம். அப்படியே ஒரு காப்பி கடையில் நுழைந்து அங்கு உட்கார்ந்து எழுதுவது பழக்கமாகிவிட்டது. அது தவிர எழுதும் போது பாதியில் எழுந்து சமையலறைக்கு சென்று காப்பி போடவேண்டாம் பாருங்கள்.

முதல் திருமணம் முறிந்த பின் மனச்சோர்வுக்கு ஆட்பட்டு தற்கொலை முயற்சி எல்லாம் செய்திருக்கிறார். அந்த மனநிலையில் தோன்றிய ஒரு கருதான் டெமென்டார்ஸ் என்ற ஆத்மா இல்லாத ஒருவித ஆவிகள்.

40 வயதிற்குள் பில்லியனர் ஆன ஒரே (பெண்) எழுத்தாளர். ராபர்ட் ப்ரூஸ் மாதிரி 12 பதிப்பகங்கள் திருப்பி அனுப்பியும் விடாது 13ம் முறையாக ப்ளும்ஸ்பெரி பதிப்பகத்துக்கு அனுப்பி வைத்தார். முதன் முதலில் இவர் அனுப்பி வைத்த கதையை படித்து அலைஸ் நியூடன் என்ற பத்து வயது ப்ளும்ஸ்பெரி பதிப்பகத்தின் சொந்தக்காரரின் மகள் தன் அப்பாவிடம் சுவாரசிமாக இருப்பதாக சொன்னதால் சரி இதை பதிப்பித்துதான் பார்ப்போம் என அவர் £1500 பவுண்டு சன்மானம் கொடுத்து முதல் பாட்டர் கதையை ஏற்றுக்கொண்டார்.
ரெளலிங்கின் இன்றய எல்லா புகழுக்கும் காரணமானவள் இந்த அலைஸ்.


எடின்பரோவில் மனிதர்களுக்கு மட்டுமல்ல மிருகங்களுக்கு கூட சிலை இருக்கிறது. Greyfriars Bobby என்கிற நாய்க்கு. இவுக கிட்டதட்ட இவரு சகா HMV நாய் மாதிரிதான். தன் எசமானர் கிட்ட அவ்வளவு விசுவாசம். எப்படின்னா எசமானர் இறந்து 14 வருஷம் வரைக்கும் அவருடைய சமாதியை விட்டு போகவேயில்லை. எசமானர் இல்லாத இந்த நாய விட்டு வெக்கிரது நல்லதில்ல போட்டு தள்ளிரனும்னு(!!) சிலர் சொல்லியிருக்காங்க. ஆனா ஒரு சில நல்ல மனிதர்கள் தலையிட்டு அதோட லைசென்சுக்கு நாங்க பணம் தரோம் ஆனா நாய் எடின்பரோ நகர மன்றத்தின் பொறுப்பு என முடிவு செய்தனர். அப்புறம் 1872ல் இவரு இறந்த உடனே அவரோட எசமானரின் சமாதிக்கு அருகேயே அடக்கம் செய்திருக்கிறார்கள். இவர வெச்சு புத்தகங்கள் இரண்டு திரைப்படங்கள் எல்லாம் வந்திருக்கு.




ஸ்காட்லேண்டில் கண்டுபிடிக்கப்பட்ட சில சமாச்சாரங்களையும் பார்ப்போம்:

ஜேம்ஸ் ஸ்காட்: நீராவி இன்ஜின்.

அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங் : பென்சிலின்

சார்லஸ் மக்கிண்டோஸ்: ரெயின்கோட்

ஜேம்ஸ் யங்: பாரஃபின் ஆயில்

கிர்க்பாட்ரிக் மெக்மிலன்: இரு சக்கர சைக்கிள்

லார்ட் கெல்வின்: கெல்வின் அளவு, thermodynamics

ஜான் பாய்ட் டன்லப்: நவீன டயர்

அலெக்ஸாந்தர் க்ராஹாம் பெல்: தொலபேசி

ஜான் லொகி பாய்ட்: தொலகாட்சி சாதனம்

இது தவிர ஃபாக்ஸ் மெஷின், தெர்மாஸ் ப்ளாஸ்க், ராடார், இன்சுலின், தபால் முத்திரை, கோல்ஃப், மருதுவ ஊசி, கணித மடக்கை (logirthm), தசம புள்ளி (decimal point), சேமிப்பு வங்கி முறை, மோட்டார் வாகன காப்புறுதி..

இது எல்லாம் இல்லாத உலகம் எப்படி இருக்கும்? இவர்கள் உலகுக்கு அளித்துள்ளது மிக நீண்டது...



மொக்கை:

நாம் இந்த பதிவுல நன்றியுள்ள நாய்கள பத்தி பாத்தோம். ஆனா இந்த BMW கார் கம்பெனிக்கு நாய்ங்க அப்டீக்கா காருமேல உச்சா போரது சுத்தமா புடிக்கவே இல்ல. அதுனால புதுசா ஒரு டெக்னாலஜி கண்டுபிடிச்சிருக்காங்க. அது என்னன்னா நாய் இந்த புது டெக்னாலஜி பொருத்திய கார் மேல உச்சா போச்சுன்னா அந்த உச்சா வழியா நாய்க்கு ஒரு ஷாக் அடிக்கும். இரண்டு தடவ இப்படி அனுபவ பட்டுச்சுன்னா அப்புறம் தென்னாலிராமன் பூன மாதிரி கார பாத்தாலே வால இடுக்கிட்டு ஓரமா ஓடிரும்னு இந்த கம்பெனி சொல்லுது.

எனக்கென்னவோ இந்த டெக்னாலஜி நம்ம ஊர்ல ஆசாமிங்களுக்கு தேவை. நம்ம முக்கிய நகரங்கள்ள குப்பைதொட்டி பக்கம், ட்ரான்ஸ்ஃபார்மர் பின்னாடி, இண்டு, இடுக்கு இங்கெல்லாம் இந்த சாதனத்த பொருத்தி உச்சா போனா ஜிக்கு ஷாக் அடிக்றா மாதிரி செஞ்சா கொஞ்சம் பொது இடத்துல சூச்சூ போரது குறையும்னு நினைக்கிறேன்.

எடின்புரத்து மக்களை விஞ்சிய மொக்கை

நம்ம ப்ரியதர்ஷனிஅதாங்க மடிக்கணணி sticky key error-னால ஊத்திகிச்சுன்னு சொன்னேல்ல, அது என்னன்னா டைப் அடிச்சு அடிச்சு ஏதாவது ஒரு கீ அதுபாட்டுக்கு அமுங்கியே இருக்கும் அதுனால நீங்க ரீ பூட் பண்ணும் போது bios கீ போர்டை தேடும்போது சத்தம் போடும் பூட் ஆகாது. முதலில் ஏதாவது வைரசோ என நினைத்தேன். பின்பு கூகுளித்ததில் கீ தான் பிரச்சனை என உறுதியானது. 9 சொச்ச பவுண்டுகளுக்கு ஈபேயில் ஒரு உபயோகித்த கீ போர்ட் ஆர்டர் செய்துள்ளேன் அது வந்த பின்னால் தான் அது சரி செய்ய முடியும். இந்த பதிவு இரவல் தர்ஷனியில்.

சரி மீண்டும் தொடருவோம்: ஆக ப்ரின்ஸஸ் தெருவில் உள்ள சிலைகள் இப்படி தங்கள் துறையில் சிறந்து விளங்கியவர்கள், சமுதாயத்துக்கு உறுப்படியாக ஏதாவது செய்தவர்கள் என பார்த்து பார்த்து அமைத்துள்ளனர். கோடை வர இருப்பதால் (ஜுலை முதல் செப்டம்பர் வரை) பிரின்ஸஸ் பூங்காவை வெட்டி, கொத்தி, பதியன்கள் போட்டு, பெயிண்ட் அடித்து தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். இங்கிருக்கும் மரங்களும் வசந்த காலமாதலால் இளம் துளிர்களை விட்டு இவர்களுடன் சேர்ந்து கோடைக்காக தானும் தயாராவது போல் உள்ளது.

எடின்பரோவில கோடை மிகப்பிரசித்தம். இங்கிருக்கும் கோட்டையில் எடின்பரோ டாட்டூஸ் என்று ஸ்காட்லாண்டை சேர்ந்த ராணுவ அணிவகுப்பு ஜூலை தொடங்கி மாதம் முழுவதும் தினமும் நடக்கும். இவர்களின் தேசிய உடையான கில்டில் (kilt) பேக்பைப்பர் இசையுடன் நடை பெறும். இதற்கான டிக்கெட் விற்பனை டிசம்பர் மாதமே தொடங்கி பெப்ரவரி முடிவதற்குள் விற்று தீர்ந்து விடும். இவர்களின் kiltஐ வைத்து இவர்கள் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர் என கண்டுபிடித்து விடலாம். கிட்டதட்ட 5000க்கும் மேல் கில்ட் வகைகள் உள்ளது. Scottish Tartans Authorityயிடம் ஒவ்வொரு கில்டையும் பதிவு செய்து வைத்துள்ளார்கள்.

உலாவை இத்தோடு நிறுத்தி, இன்று மொக்கை சற்று நீளமாக இருப்பதால்:


மொக்கை:

இது உண்மையாக நடந்த விஷயம். இந்த மருத்துவ நண்பர் மூலம் அறிந்துகொண்டது.

CT மற்றும் அல்ட்ரா ஸ்கான் நிபுனரான இவரிடம் ஒரு இள வயதுக்காரர், வயது 30 இருக்கலாம், அல்ட்ரா ஸ்கேனுக்காக அனுப்பப்பட்டிருந்தார். அனுப்பியவர் இளவயதுக்காரரின் மனைவியின் கைனகாலஜிஸ்ட். திருமணமாகி குழந்தை பிறக்கவில்லையாதலால் மனைவியை சோதித்து குறை ஒண்றும் இல்லாததால் கணவனை ஸ்கேன் செய்ய சொல்லி இந்த நிபுணரிடம் வந்து இருக்கிறார்.

வந்தது ultrasound scan of the scrotum; அதாவது ஆண் மலட்டு தன்மைக்கான சோதனை. மருத்துவர் அந்த நபரை உள்ளே அழைத்து மேசை மீது படுக்க வைத்து பொதுவான கேள்விகள் கேட்டிருக்கிறார். எப்போது திருமணமானது, எவ்வளவு நாட்களாக குழந்தைக்காக முயற்சி செய்கிறார்கள், வேறு என்ன சோதனைகள், சிகிச்சைகள் செய்தனர் போன்றவை. ஸ்கேன் தொடங்குவதற்கு முன்பு பார்த்தால் அந்த நபருக்கு இரண்டு விறைகளுக்கு பதிலாக ஒன்றுதான் இருந்திருக்கிறது. மருத்துவர் அதனால் முதலில் கைகளால் சோதித்து பார்த்ததில் இடது பக்கத்தை காணோம். சில சமயம் சிலருக்கு உள்பக்கமாக அமைய வாய்பிருப்பதால், அல்ட்ரா ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார். அதிலும் வலது பக்கம் இருந்தது இடது பக்கம் இல்லை என உறுதியானது. பின்பு மறுபடி அந்த நபரிடம் பேச தொடங்கினார்:

மரு: இதுக்கு முன்னாடி எந்த டாக்டராவது சோதிச்சிருக்காங்களா?

நபர்: இல்லையே

மரு: இல்ல எப்பவாவது நீ குழந்தையா இருந்த போது யாராவது சோதிச்சு இத பத்தி சொல்லியிருக்காங்களா?

நபர்: இல்லை இதுதான் முதல் தடவை

மரு: உனக்கு ஒரு விறைதான் இருக்கிறது அது உனக்கு தெரியுமா?

நபர்: (கலக்கத்துடன்) அப்படியா?

மரு:(இப்போது சந்தேகத்துடன்) பொதுவா ஒரு ஆணுக்கு இரண்டு விறைகள் இருக்கும் அது தெரியும்தானே?

நபர்: ம்ம்ம் வந்து அதுவும் தெரியாது

மரு:!!!!(அதிர்ச்சி, ஆச்சர்யம்)....

மருத்துவர் ஸ்கேனை முடித்து ரிசல்டை கொடுத்து அந்த நபரை அனுப்பி வைக்கும்போது அந்த நபர் பார்ப்பதற்கு மிக டீசென்ட்டாக இருந்ததால் மருத்துவர் அவரிடம் என்ன படித்திருக்கிறீர்கள் என கேட்ட போது,

நபர்: M.B.A.!!


----------------------------------------------

ஆக ஒரு பக்கம் பத்து பதினெஞ்சுலேயே பழுத்துடுது, இன்னொரு சாரார் இப்படி. இரண்டுமே தவறு. தங்களுடைய உடலமைப்பு, பிறப்புறுப்புக்கள் மேலும் செக்ஸை பற்றிய புரிதல்கள் இப்படித்தான் இருக்கிறது.

இதில் இன்னுமொரு முக்கியமான விஷயம், சரி அந்த நபருக்குத்தான் தெரியவில்லை, அவர் மனைவிக்கு? ஆண்களே இப்படி என்றால் பெண்கள் நிலை இன்னும் மோசம். பலர் தங்கள் திருமணத்திற்கு பிறகு கண்வன் மூலமே அறியே வேண்டிய சுழ்நிலையில் இருக்கிறார்கள்.

சரி இதுக்காகதான் இப்படிப்பட்ட மக்களுக்க ஒருத்தர் தொடர் எழுதினா அதையும "ஆடுத்தவன் வாந்திய திங்கறவன்" அதாவது plagiaristன்னு சொன்னா இன்னாதான்பா செய்யுரது?


பேக்கப்(backup) செய்ய மறவேல்....

இல்லேன்னா தொடரந்து எடின்புரத்து மக்கள் எழுத முடியாம, 15 வயதுக்கு எவ்வளவு சுதந்திரம் தேவை? என்று பதிவு போட வேண்டியதிருக்கும்.


கோவாவில் மரணமடைந்த ஸ்கார்லெட் முதலில் தலைப்பு செய்தியாக இருந்து, பின்பு, இரண்டு, பத்து பதிமூன்றாம் பக்கம் என இங்கு யுகேயிலும் மெல்ல சத்தம் அடங்கிவிட்டது. அனால் நேற்று பாருங்கள் இங்கு வந்த ஸ்கார்லெட்டின் உடம்பை பிரிடிஷ் அதிகாரிகள் மூன்றாவது முறையாக போஸ்மார்ட்ம் செய்த போது சில பாகங்களை காணோம் என்று கண்டுபிடித்துள்ளனர். கோவா அதிகாரிகள் அதெல்லாம் சகஜம்பா என சவுண்டுவிட்டிருக்கின்றனர். காணாமல் போனவை இரண்டு கிட்ணி, வயிறு, மற்றும் கருப்பை. கோவா அட்டாப்ஸியில் கிழிச்ச அதிகாரி, அட்டாப்சி அரையில் அடிக்கும் ஃபார்மால்டிஹைட் மப்புல உள்ள வெக்க மறந்திருக்கலாம்.

ஃபியோனா இன்னும் என்னவெல்லாம் சந்திக்க வேண்டியதிருக்குமோ?

இந்த விஷயத்தில் ஒரு மீள் பார்வையில் 15 வயது விடலை பருவ வயது குழந்தைகளுக்கு எவ்வளவு சுதந்திரம் தரலாம்? இந்திய ஊடக வியூகம் இந்த பெண் ஏற்கனவே போதை பொருட்கள் உபயோகிக்கும் வழக்கம் உள்ளவர், இவளுடைய அம்மா ஃபியோனா இப்படி இவளை தனியே விட்டிருக்கக்கூடாது என்ற ரீதியில் இருக்கிறது. ஆனால் இங்கு யுகே ஊடகங்கள் கோவாவில் பெண்கள் தனியே போகமுடியாது, அங்கு பல ஆண்கள் குறி விரைத்து அலையும் கார்த்திகை மாதத்து நாய் போல் அலையுர மாதிரியான ஒரு பார்வை. ஏனென்றால் நாம் குழந்தைகளை வளர்க்கும் முறையும் இங்கு மேற்கில் வளர்க்கும் முறைக்கும் மிகுந்த வித்தியாசங்கள உள்ளன.

ஸ்கார்லெட்டை தனியே விட்டது தப்பு என்று எப்படி சொல்ல முடியும்? 15 வயதிலிருக்கும் குழந்தைக்கும் எல்லைகள் தேவைதான். ஆனால் அவர்கள் அதனை மீறுவதற்கு தயங்குவதே இல்லை. இதனால் பெற்றோருக்கும் அந்த வயது குழந்தைக்கும் மன்ஸ்தாபங்கள் வருவது தவிர்க்க முடியாது. இதற்காக எல்லைகளை கடுமையாக்குவது சரியென தோன்றவில்லை. சுதந்திரம் இவர்களுக்கு மிக அவசியம். சுதந்திரத்தை அவர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பதை பொருத்து. ரொம்பவும் பொத்தி பொத்தி கட்டுப்பாட்டுக்குள் வைத்தால் அவர்கள் வளர்ந்த பின் முற்றிலுமாக இழக்கவும் நேரிடும்.

ஆக என்ன சொல்ல வரேன்னா நேத்திக்கு நம்ம லாப்டாப் sticky key errorரினால் ஊத்திக்கிச்சு. ஆக பதிவு போட முடியாம போயி, எங்க நட்சத்திர வாரம் விட்டு போயிருமோன்னு, ஆபிஸிலிருந்து கிட்டத்தட்ட பாயை பிறாண்டி ஒரு பதிவுன்னும் வெய்ங்களேன்..



மொக்கை:



போபால் விஷவாயு விபத்து நடந்து 26 வருடங்கள் ஒடிவிட்டன. போபாலை தாண்டி யாருக்கும் இது நினைவிருக்குமா என்பது சந்தேகம். இன்றும் அந்த தொழிற்சாலையை சுற்றி உள்ள தண்ணீர் நிலைகள் விஷத்தன்மையாகவே இருக்கிறது பலரும் இன்னும் இதனால் பாதிப்படைந்து வருகின்றனர். இதை கண்டித்து ஒரு கண்டன கடிதம் இங்கு சென்ற வார கார்டியன் நாழிதலில் வந்தது. அருந்ததி ராயுடன் சேர்ந்து இன்னும் ஒரு 100 பேர் கையெழுத்திட்ட ஒரு கடிதத்தின் பகுதி கீழே. எனக்கு இதை படித்தது. அக்பர் பீர்பால் கதைதான் ஞாபகத்துக்கு வந்தது. அக்பர் பீர்பால் வர ஏன் தாமதம் என போய் பார்த்துவர சொன்ன போது பீர்பால் அரசனது முட்டாள்தனத்தை உணர்த்த, கீழே மூட்டப்பட்ட நெருப்பிலிருந்து மிக உயரே ஒரு பாணையில் சமைத்துக்கொண்டிருப்பார். அதை போல்தான் உள்ளது, இந்தியாவில் பிரச்சனைக்கு, யுகேயில் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.

Letters
Legacy of Bhopal

* The Guardian,
* Friday April 11 2008
* Article history

About this article

This article appeared in the Guardian on Friday April 11 2008 on p33 of the Leaders & reply section. It was last updated at 00:17 on April 11 2008.

Nearly a quarter of a century after the Union Carbide gas disaster in Bhopal, the company's factory remains uncleaned while chemicals leaking from the site continue to poison the drinking water of tens of thousands. Children in the affected communities are being born with deformities so severe that their pictures could not be published. Union Carbide, now wholly owned by Dow Chemical, disclaims responsibility for the factory and for the last 16 years has refused to appear in the Indian court where it faces serious criminal charges. In these circumstances, we urge India's prime minister, Manmohan Singh, and his ministers to honour their promises made two years ago on proper healthcare and monitoring for those affected by the gas and poisoned water, to obey the Indian supreme court's 2004 order to provide safe drinking water for communities whose water is poisoned, and not to have business dealings with Union Carbide or its owners while the contempt of court continues.

Indra Sinha writer, Tahmima Anam writer, Michael Anderson filmmaker, Saffron Burrows actress, Matthew D'Ancona writer, Anne Enright writer, Hari Kunzru writer, Arundhati Roy writer and 95 others

எடின்புரத்து மக்கள்-2

எடின்பரோ, ஐரோப்பாவில் மிக அதிகமான சுற்றுலா பயணிகள் வரும் இடம். வருடத்தின் எந்த நாளிலும் ப்ரின்ஸஸ் தெருவில் போனால் ஆங்காங்கே கையில் காமிராவுடன் எல்லா கோணங்களிலும் படமெடுத்துக் கொண்டிருப்பதை பார்க்கலாம். ட்ராம் போடப்போவதால் (அதெப்படி எங்க ஊர்ல மாத்திரம் ட்ராம் இல்லை எங்களுக்கும் வேணும்னு, நெரிசலை குறைக்கும், மின்சாரத்தில் ஓடுவதால சுற்றுப்புற சூழலுக்கும் நல்லது அது இதுன்னு சொல்லி) ஆங்காங்கே தோண்டி வேலை நடந்து கொண்டிருக்கிறது. 2010ல் முடிந்துவிடும் என்று எ.ப. கோமகன் சொல்லியிருக்கிறார்.

இந்த நகரத்தில் நான் கவனித்தது, மென்று துப்பிய சூயுங் கம் காலால் மிதிபட்டு நடை பாதையெங்கும் அம்மாவாசை இரவு வானத்து நட்சத்திரம் போல ஆங்காங்கே. இதை மாதிரி நான் வேறு எங்கும் பார்த்ததில்லை. டணால் தங்கவேலு சொல்லவது போல் சும்மா நாகூர் ஆடு தள திங்கிர மாதிரி இன்னமா மென்னு துப்பியிருக்காங்கப்பா?

சரி மறுபடி வால்டர் ஸ்காட்க்கு வருவோம். ஸ்காட் ஒரு சிறந்த கவிஞர் மற்றும், சரித்திர நாவல்களின் முன்னோடி. பிறந்தது எடின்பரோவில். போலியோவினால் பாதிக்கப்பட்டு நடப்பதற்கு கஷ்டப்பட்டிருக்கிறார். ஆரம்ப காலங்களில் வெகுவாக கவிதைகளே எழுதிய ஸ்காட், 1814ல் வேவர்லி என்ற நாவலை யார் எழுதினார்கள் என்று குறிப்பிடாமலே எழுதி வெளியிட்டார். அது மிகப்பிரபலமடைந்தது. அதைத் தொடர்ந்து எழுதி வெளியிட்ட நாவல்களுக்கு "வேவர்லி எழுதிய எழுத்தாளரின் படைப்பு" என்றே பெயரை வெளியிடமலேயே இருந்தார். ஒன்று இரண்டல்ல 14 வருடங்களுக்கு இவர் பெயரே "வேவர்லி எழுதிய எழுத்தாளராகவே இருந்தது. இதுவே எடின்பரோவில் இரயில் நிலையத்துக்கும் பின்பு பெயரானது. போன பதிவில் பார்த்த ஸ்காடின் சிலைக்கு பின்புறம் வேவர்லி ஸ்டேஷன் உள்ளது. அது என்னடா வேவர்லி என்று ஆராய்ந்த போது தெரிந்துகொண்டது.

இன்னுமொரு சுவாரசியமான விஷயமிருக்கிரது. நாமெல்லாம் சின்ன வயதில் படித்த/கேள்விப்பட்ட பிரபலமான ராபர்ட் ப்ரூஸ் என்னும் ஸ்காட்லேண்டு ராசா எப்படி ஆறு முறை தோற்றாலும் தப்பியோடி குகையில் ஒளிந்திருந்த போது ஒரு சிலந்தி மறுபடி மறுபடி வலை பிண்ணி அறுந்து போய் அப்படியும் விடாமல் பத்தாவது முறையாக முயன்று வெற்றிகரமாக வலையை பிண்ணியதை பார்த்து அதுவே ஒரு உத்வேகத்தை கொடுக்க, ப்ரூஸ் ஏழாவது முறையாக இங்கிலாந்து அரசனுடன் போர் புரிந்து வெற்றி பெறுகிறான் என்னும் கதையை கட்டிவிட்டது, சாரி எழுதியது இந்த வால்டர் ஸ்காட். கதையில் பாதிதான் உண்மை. ஆறு முறை தோற்று ஏழாவது முறை வென்றது. குகை, சிலந்தி, இன்பிரேஷன் எல்லாம் ஸ்காட் உபயம். இருந்தாலும் குழந்தைகளுக்கு விடாமுயற்சியை பற்றி சொல்லித்தர மிகச்சிறந்த கதை. இன்றும் போற்றப்படும் ராபர்ட் ப்ரூஸ் ஒருவேளை ஏழாவது முறையும் தோற்றிருந்தால் சரித்திரத்தில் பச்சோந்திக் குணம் படைத்தவன் நண்பனையே காட்டிக்கொடுத்தவன் என தூற்றப்பட்டிருப்பான். Braveheart என்னும் மெல் கிப்சன் நடித்த சினிமாவை பார்த்திருப்பீர்கள். அதில் வில்லியம் வாலஸின் கதையை காட்டியிருப்பார்கள். கொரில்லா போர் முறையில் முதன் முதலில் இங்கிலாந்து மன்னனை வென்றவன். அவனுடைய ஒரு தளபதியாக இருந்தவனே ராபர்ட். பின்பு அரசனாகும் ஆசையால் வில்லியம் பிடி படப்போவது தெரிந்தும் அவனனை காப்பாற்றாமல் இருந்துவிட்டான். வில்லியமிடமிருந்து கற்ற போர் தந்திரங்களை ஆறு முறை தப்பு தப்பாக கடைபிடித்து பின்பு ஒரு வழியாக ஏழாவது முறை வில்லியம் முதன் முதலாக வென்ற இடத்திலேயே இவனும் போரினை வென்றான் என்பதுதான் உண்மையான சரித்திரம். ராபர்டை விட பிரமிக்க தக்க வீரம் கொண்ட வில்லியம் பற்றி ஏனோ அவ்வளவாக வெளி உலகில் தெரியவில்லை. எடின்பரோவிலிருந்து சுமார் ஒரு மணிநேர பயண தூரத்திலிருக்கிறது வில்லியம் வாலஸ் மெமொரியல் (படம்).



கட், இப்போது ப்ரின்ஸஸ் தெருவுக்கு வருவோம், அப்படியே அங்கிருந்து தெற்கு பக்கமாக நடந்தால் அடுத்த புகழ் பெற்ற கவிஞரான ஆலன் ராம்சேயின் சிலை. ஸ்காட்டுக்கும் முன்னோடி. அவருக்கு பின்னால் தெரிவது புகழ்மிக்க எடின்பரோ கோட்டை.


அப்படியே இன்னும் கொஞ்சம் நடந்தால் வலி தெரியாமல் அறுவை சிகிச்சை செய்ய அனஸ்தீசியா என்னும் முறையில் க்ளோரோஃபார்மை உபயோகிக்கலாம் என்று உலகுக்கு காட்டி அதுவரை ஈதர் என்னும் இரசாயனத்தை உபயோகித்து வந்ததை மாற்றிய ஜேம்ஸ் யங் சிம்சன் என்னும் ஒரு மருத்துவரது சிலையை பார்க்கலாம்.



மிக தைரியமாக தனக்குதானே சோதனை செய்து மயங்கி விழுந்து க்ளோரோஃபார்ம் சிறந்தது என கண்டுபிடித்தார். சற்று அளவு கூடியிருந்தால் உயிருக்கே ஆபத்தானதாக இருக்கும். முதன் முதலில் பிரசவத்தின் போது வலி தெரியாமல் இருக்க க்ளோரோஃபார்மை உபயோகித்தவரும் இவரே. வழக்கம் போல் மத குருக்களால் இதை பொறுக்க முடியவில்லை. அவர்கள் வாதம் இப்படி பிரசவத்தின் போது நினைவில்லாது குழந்தை பிறந்தால் சாத்தான் தான் வந்து பிறக்கும் என இவருக்கு ஒரே தடைகள். அதையெல்லாம் எதிர்த்து போராடியிருக்கிறார். பின்பு 1853ல் விக்டோரியா மகாராணியின் பிரசவதின் போது இதை உபயோகித்ததால் எல்லா எதிர்ப்பும் சத்தமில்லாமல் அடங்கிவிட்டது.




மொக்கை:

நம்ம ஊர்ல மாடு சரியா பால் கறக்கனும்னா கன்னுகுட்டிய விடுவோம், இல்ல வைக்க அடச்ச பொம்மய வெச்சு ஏமாத்துவோம், இல்ல நாலு சாத்து சாத்துவோம் . ஆனா இங்கிட்டு நம்ம ராட் டவர்னர்ங்கர பால்காரர் சீன முறையான தா(டா)ய் சீ (tai chi)ய அவர் பண்ணேல இருக்குற மாட்டுக்கு முன்னால இவரு பண்ணினா மாடுங்கள்ல்லாம் அப்படியே ரிலாக்ஸ்டாயி லிட்டர் லிட்டரா கறக்குதாம். காலேல எழுந்து மாடுங்க முன்னாடி இவர் தாய் சீ பண்ண பண்ண இவரு மூடு அப்படியே மாடுங்களுக்கு தொத்திக்குதாம். சிரிக்காதீங்க. ரொம்ம சீரியஸா சொல்லியிருக்காரு வேணுமின்னா படத்துல பாருங்க:

Souce: Metro

இந்த மாட்டுப் பால்லர்ந்து பண்ணுற சீஸுக்கு பெயர் : தாய் சீஸ்-ன்னு வெக்கலாம். நம்ம வைகை புயல, போக்கிரி கெட்டப்புல வெச்சு ஒரு சீன் நெனச்சு பாருங்க. சாமி, இவிங்கள மாதிரி அளுங்கதான் நம்ம கோடம்பாக்கத்து கோமாளிகளுக்கு நல்ல இன்ஸ்பிரேசனா இருக்காய்ங்கப்பா.

டி.கெ: இதில ராட் என்ற பால்காரருக்கு எந்தவித்திலும் உ.கு இல்லை.

எடின்புரத்து மக்கள்-1

எடின்பரோ மிகப் பழமையான நகரம். உதரணத்துக்கு, எந்த ஒரு கடையிலும, போன நூற்றாண்டில் ஆரம்பித்தது என்பதை since 1846, Estd 1874 என பெருமையாக போட்டிருப்பதை பார்க்கலாம் . நான் முடிதிருத்த சென்ற கடை ஆரம்பித்தது 1890ல். 118 வருடங்களுக்கு வெட்டி தள்ளியிருக்கிறார்கள். இங்கு சுலபமாக முடி திருத்தும் கடையை கண்டுபிடிக்க வசதியாக எல்லா முடிதிருத்த கடை வாசலில் சிவப்பும் வெள்ளையும் பட்டையாக சுழன்ற மாதிரி வண்ணமடித்த ஒரு பெரிய சைஸ் உலக்கையை வாசலில் வைத்திருக்கிறார்கள்.


கடை உள்ளே சென்றால் காலம் உறைந்து கிடந்தது. பழைய நாற்காலிகள், பழைய கண்ணாடிகள், சுவரெங்கும் ஒவியங்கள், மின்சாரம் கண்டுபிடித்த காலத்து வயரிங் அதன் சுவிட்சுகள் என கதவை திறந்து கிட்டத்தட்ட 1890 -கே போன மாதிரி இருந்தது. நல்ல வேளை லேட்டஸ்ட் ப்லிப்ஸ் மின்சார முடி வெட்டும் கருவியும், ஆங்காங்கே கிழித்துவிட்டுக்கொண்ட Levi ஜீன்ஸ், லேசர் கட் ஹேர்ஸ்டைல் கொண்ட முடிதிருத்த நங்கைகள் 21ம் நூற்றாண்டு.

"இங்க பல மாடல்கள் வந்து வெட்டிக்கொண்டிருக்கிறார்கள் தெரியுமா" என சுவரிலிருந்த புகை படங்களை காண்பித்தாள் எனக்கு வெட்டிய நடு வயது பெண்மணி. நம்க்கு ஒருத்தரயும் தெரியவில்லை, அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் "ஓ வாவ்!!" என்று அசையாமல் கேட்டுக்கொண்டிருந்தேன். 10 நிமிடங்கள் வெட்டியதற்கு ஆறு பவுண்டுகள்.

பல எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், அறிஞ்ர்கள் என புகழ் பெற்றவர்கள் பிறந்த அல்லது வாழ்ந்த இடம் எடின்பரோ.. இன்று நாம் எடுத்துத் தள்ளும் வண்ண புகைப்படத்தை முதன் முதலில் எடுத்தவர் எடின்பரோவில் பிறந்த புகழ் பெற்ற கணித மற்றும் இயற்பியல் விஞ்ஞானி James Clerk Maxwell. அவர் பிறந்த நெ 14, இந்தியா தெரு நானிருக்கும் இடத்திலிருந்து பத்து நிமிட தூரத்தில் இன்றும் உள்ளது.

நம்ம ஊர்ல அரசியல் சம்பந்த பட்டவர்களின் சிலையையே பார்க்க முடியும். ஆனால் இங்கு எடின்பரோவின் பிராதான சாலையான பிரின்சஸ் தெருவில் நடுநாயகமாக சிலை வைத்திருப்பது எழுத்தாளர் Walter Scottக்கு.


அதுவும் சும்மா நட்ட நடு ரோட்டில் இல்லை. மிக அழகிய வேலைப்பாடு மிக்க உயர்ந்த கோபுரத்துடன்.







ஆக எழுத்தாளர இப்படி மதிக்கிர ஒரு ஊர்ங்கறது ஒரு பெரிய விஷயம். அதனாலதான் இன்னிக்கி இந்த ஊர்ல பிறந்து வளர்ந்த J.K.Rowling இங்கிலாந்து ராணியை விட பணக்காரராக இருக்கிறாரோ என்னவோ.

வலம் தொடரும்....


மொக்கை பகுதி:


நியுஸியில் நண்பர் ஒருவர், பிரயாணத்துக் கேற்ற ஒரு பையை, சூடு ஆறாமல் ஒரு ப்ளாஸ்க், ஒரு சிறு சாப்பாட்டு டப்பா, சாவி, பேனா, விசிட்டிங் கார்டு, செல் ஃபோன், இத்யாதிகளை வைத்துக்கொள்ளலாம், அன்புடன் பரிசளித்தார். நல்ல உயர்ரக பை. பல பன்னாட்டு பொருட்கள் போல் சீனாவில் தயாரான சரக்குதான்.
அந்த பையில் ஒரு டாக் (tag) எந்த கம்பெனி தயாரிப்பு என்று ஒரு பக்கத்திலும் (கிழே உள்ள படம்)





அதன் பின் பக்கத்தில் இந்த பையை எப்படி பரமரிக்க வேண்டும் என்ற குறிப்பும் இருந்தது. அனால் என்னால் அதை மட்டும்தான் புரிந்து கொள்ள முடிந்தது. அதற்கு கீழே உள்ளதை இங்கே நீங்கள் பார்க்கலாம்:




என்ன ஏதாவது புரிந்ததா?

ஒரு குத்து மதிப்பாக என்னதாண்டா சொல்லவறீங்க? சீன மொழியை அப்படியே ஆங்கலத்தில் மொழி பெயர்த்த மாதிரி உள்ளது. ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது, சீனாவில் எப்படியாவது ஆங்கிலத்தை வென்று விட வேண்டும் என்ற ஒரு தீவரம் தெரிகிறது. இந்த க்வாலிடி கண்ட்ரோல் எனப்படும் ஒரு பகுதி மக்களை இந்த பை தயாரிக்கும் நிறுவனம் விசேஷமாக் கவனித்திருக்க வேண்டும். இல்லையெனறால் பாரிஸிலிருந்து நியுஸி வரை வியாபாரம் செய்யும் ஒரு கம்பெனியின் பொருட்க்களில் இப்படி ஒரு tag போட முடியுமா?

எலி அம்மணமா ஓடுது..

விஷயமே இல்லாம எழுதுவது எப்படி? இல்லாவிட்டால் ஏன் வலைப்பதிவு எழுதவேண்டும். ஒரு சிலரை தவிர மற்ற எல்லோருடையதும் டையரி குறிப்புகள்தான். சரி அடுத்தவரின் இந்த சொந்த கருத்துக்களை படித்து என்னவாகப்போகிறது? ஒத்துப்போனால் ஜால்ரா அடிக்கலாம் இல்லாவிட்டால் கயிதே கஸ்மாலம் என இறங்கிவிடலாம் இது இரண்டுமில்லை என்றால் ஜல்லிஅடிக்கலாம். ஆனால் பதிவெழுதாவிட்டால் பாயை பிராண்டும் பதிவர்கள் பலர் சொல்லும் காரணங்கள்: (எஸ் ராமகிருஷ்ணனின் வலைபக்கத்தில் பொதுவாக எழுதுவது ஏன் என்று ஒரு பதிவு போட்டிருக்கிறார் அதிலிருந்தும் சில காரணங்கள்) குறிப்பாக இந்த காரணங்கள் அத்தனையும் வலைபதிவர்களுக்கு பொருந்தும்:

1. எழுதுவதற்கான அவசியத்தையும் உந்துதலையும் உணர்வதால்
2) தன்னையும் மற்றவர்களையும் மகிழ்விக்க.
3) யாருக்காவது எதையாவது கற்றுக் கொடுக்க
4) தன் கருத்துக்களை தெரியப்படுத்த
5) வேதனையிலிருந்து விடுதலை அடைய
6) புகழ்பெற
7) பணக்காரன் ஆக
8) உலகை செம்மைபடுத்த
9) பழக்கத்தின் காரணமாக
10) அடுத்தவர் எழுதுகிறாரே என்று எழுதுவது
11) பெண்நண்பர்கள் பெறுவதற்காக
12)அலுவலக ஊழியர்களிடம் தனித்து காட்ட, பாராட்டு பெற
13) பதவி உயர்விற்காக எழுதுவது.
14) சினிமாவிற்குள் நுழைவதற்கு ( !!?? இது எஸ்.ரா வின் கருத்து)
15) ஒய்வு பெற்ற ஏதாவது செய்யவேண்டுமென என்று
16) வீட்டில் பகலில் சும்மா இருப்பதால்
17) பிரபலமானதை உறுதி செய்து கொள்வதற்கு எழுதுவது
18) தற்பெருமைக்காக (ego gratification)
19) தன்னை தனித்து காட்டுவதற்காக
20)புடுங்க ஆணி, தட்ட பெட்டி எதுவுமில்லாததால்
21)என்னவோ ஆரம்பிச்சிடேன் நிப்பாடா முடிலீங்க..

ஆக யாரும் தப்பிக்க முடியாது இந்த 21 காரணங்கள்ள நீங்க இதுல எது என்பது அவரவர்க்கு வெளிச்சம்.

எனினும் வலைபதிவு வந்த பின் இதுவரை, கையெழுத்து, காசோலை, வேலைக்கான கடிதம், தபாலில் முகவரி ஆங்காங்கே விண்ணப்ப படிவங்கள் என இதைத் தாண்டிஎதுவுமே எழுதாத (என்னை மாதிரி) ஆயிரக்கணக்கானோர் எழுத தொடங்கியது மிக நல்ல மாற்றம். பல நட்புக்களை ஏற்படுத்தி, வெளியே தெரியாதிருந்த திறமைகளை வெளிக்கொணர்ந்து, பலருக்கு இது கிட்டதட்ட ஒரு சிறந்த பொழுதுபோக்காகவே மாறிவிட்டது. இந்த இடத்தில் பதிவு எப்படி எழுதக்கூடாது என்று சொல்வதை விட பதிவை எப்படி எழுதலாம் என சொன்னால் உபயோகமாக இருக்கும்.

வெற்றிகரமாக் எழுதுவது எப்படி என்று சொல்லிக்கொடுக்க முடியாது ஆனால் கொடுமையாக எழுதுவதை தவிர்க்கலாம்.

எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதாலாம், உதாரணத்துக்கு, "இன்று எனக்கு மனச்சோர்வு அதிகமாக உள்ளது" என்றால் எலி அம்மணமாக ஓடுது என்பது போல்தான். வாசகர் உங்கள் கதையை கேட்பதில் ஆர்வமாக உள்ளனர் ஆனால் வெறும் செய்திமாதிரி சொன்னால் அதன் சுவாரசியம் போய்விடும். இன்று எனக்கு மனச்சோர்வு, அதனால் பாருங்கள் என அறைக்குள் வீசம் வாசம் கூட பிடிக்கவில்லை, ஏன்? குளிக்கவுமில்லை, ஏன்? எதனால் மனச்சோர்வு என படிக்கும் வாசகனை சுவாரசியமாக்கும் நுட்பமான விவரனை எழுத பழகுங்கள். கவனம் அதற்காக கொஞ்சம் ஓவராக போயி மூக்குறிஞ்சி, எங்க நம்ம மேல தடவிடப்போறார்னு வாசகன் பயந்து ஒடற மாதிரி வேண்டாம்.

நகைச்சுவை உணர்வு மேலோங்கி இருந்தால் நல்லது. எதுவுமே தமாஷ்தான். உணவர்வுபூர்வமான ஒன்றையோ இல்லை மிக கறாரான விஷயத்தையோ நகைச்சுவையாக சொல்லலாம், இதனால் தப்பில்லை. அதே சமயம் ஒரு விஷயம் நகைச்சுவையாக சொல்லப்பட்டாலும் அது சாதாரணமானது என்றும் ஒதுக்கித்தள்ள முடியாது. உதாரணத்துக்கு: மனச்சோர்வு மிக அதிகமாகி
தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்து, எது சிறந்த வழி என்பது தெரியவில்லையாதலால் நூலகத்துக்குச் சென்று "வெற்றிகரமாக தற்கொலை செய்து கொள்வது எப்படி" என்ற ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு இரவல் வாங்க லைப்பரரியனிடம் கொடுத்த போது " சரி, யார் வந்து இதை ரிட்டன் பண்ணுவார்கள்" என்று ரொம்ப அக்கறையாக கேட்டார். (நன்றி இரா. முருகன்).

தடித்த தோல் இருப்பது நலம். உங்களை சீண்டி பின்னூட்டம் வந்து அதற்காக கோபித்துக்கொண்டு அதை வீட்டில் எல்லோரிடமும் காண்பிக்கும் அளவுக்கெல்லாம் போகாதீர்கள். குறை சொல்பவர்கள் எல்லாக் காலங்களிலும் இருந்தார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள். அடுத்த பதிவ பத்திஞ்சிட்டு போய்ட்டே இருக்கனும். சரியான காரணமா இருந்தா பதில் சொல்வது உங்க கடைமை மத்தத கண்டுக்க கூடாது. பி கூல்.

தினமும் இல்லாவிட்டாலும் வாரம், இல்லை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை என தொடர்ந்து எழுத வேண்டும். என்னை மாதிரி அப்ஸ்காண்ட் ஆகக் கூடாது.
ப்ளஜ்ஜியரிசத்தை அதாவது சுடுவது தவிர்த்தல் நல்லது. வலையில் இல்லாதது இல்லை. ஒரு முனைவர் பட்டத்துக்கான ஆய்வறிகையே எழுதுமளவுக்கு விஷயமிருக்கிறது. ஒரு விஷயத்தை படித்து அதை உங்கள் கண்ணோட்டத்தில் சொல்லலாம் முடிந்தவரை குறிப்பு, சுட்டி கொடுப்பது சிறந்தது. என் பள்ளிக்கூட தமிழ் ஆசிரியை பரிட்சையின் போது காப்பி அடித்தால் "அடுத்தவன் வாந்தி எடுத்தத திங்கிறான் பாரு" என்று கடிந்து கொள்வார். உங்களுக்கு அது ஆனந்தமாக இருக்கிறது என்றால் தடையேதுமில்லை. உங்கள் விருப்பம்.

வலைப்பதிவு ஆரம்ப காலங்களில் உங்கள் ரெப்ரிஜிரேட்டரின் கீழ் பூஞ்சை பிடித்துவிட்டது என எழுதியபோது நூற்றுக்கணக்கில் பார்வையிட்டிருப்பார்கள், ஆனால் இன்று நீங்கள் எவ்வளவு நன்றாக எழுதினாலும் ஏதோ வெளி மண்டலத்தில் சவுண்ட் விடுறமாதிரி ஆகிருச்சு. ஒரு பெரிய வாசகர் வட்டத்தை எதிர்பார்த்து எழுதினால் உங்க ஆசை உடனடியாக ஃப்யுசாகிவிடும். நீங்கள் எழுதுவதை உங்களாலேயே முதலில் ரசிக்க முடிந்தால்தான் அடுத்தவரை பற்றி நீங்கள் கொஞ்சம் எதிர்பார்கலாம்.




மொக்கை பகுதி:

மார்ச் இறுதியில் ராணியம்மா ஹீத்ரோவின் டெர்மினல் 5 திறந்து வெச்சாங்க. இரண்டு நாட்கள் கழித்து பொது மக்களுக்கு திறந்து விட்டாங்க. இன்னிக்கி வரைக்கும் எக்க சக்க பிரச்சனைகள். இங்கிருக்கும் ஊடகங்களுக்கு ஒரே கொண்டாட்டம். அக்கு வேறு ஆணி வேராக பிரிச்சு மேஞ்சுகிட்டு இருக்காங்க. 30,000 பெட்டிகள் மலை போல் குவிந்துள்ளன. இன்னும் அதனது சொந்தக்காரர்களை போய் சேரவில்லை. இன்றய செய்திப்படி பெட்டிகள் போய் சேருவது மிக கடினம் என கூறுகிறார்கள். ஆனா இதுல கஷ்டப்படரது பிரயாணிகள்தான்.

கீழே உள்ள படத்தில் பாருங்கள் பெட்டிக்குள் உறங்கும் பிரயானிகள்.


இதை வைத்து வெளியான கார்டூன்:

.