எடின்பரோவின் குறுக்காக லீத்தின் தண்ணீர் (Water of Leith) என்னும் சிற்றாறு ஒடுகிறது. பெரும் பாலும் இந்த மாதிரி பெரு நகரங்களில் அதுவும் அதன் குறுக்காக ஓடும் நதிகளின் நிலமை எப்படி இருக்கும் என்பது தெரிந்ததே. ஆனால் இந்த நதி அப்படி இல்லாமல் மிகவும் சுத்தமாகவே வைத்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது. இந்த வருடம் பனி அதிகமாதலால் சுற்றியுள்ள மலைகளிலிருந்து உருகி வரும் தண்ணீர் தெள்ள தெள்ளிவாக ஓடுகிறது. சென்ற வார இறுதியில் இதன் கரையோரமாக 7 மைல் நடந்து சென்ற போது பிடித்து வந்த படங்கள்.
இறுதியாக, இந்த நதியின் கரையோரமாக ஒரிடத்தில் 2004ல் எய்ட்ஸ் நாள் துவங்கியபோது அதன் நினைவுச் சின்னமாக இந்த சிமிண்டினால் ஆன பலகையை பதிந்து வைத்திருக்கிறார்கள். இது எடின்பரோவின் புகழ் பெற்ற டீன் காலரி, மற்றும் கலை அருங்காட்சியகம் போகும் வழியில் உள்ளது.
