Showing posts with label காமெடி. Show all posts
Showing posts with label காமெடி. Show all posts

பார்க்க சிரிக்க ஒரு வீடியோ

இந்த வருடம் ஜுன் மாதம் நடந்த தமிழ் சங்க நிகழ்ச்சியில் வெலிங்டன் தமிழ் டாக்கீஸ் அரங்கேற்றிய ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியின் வீடியோ இங்கே. (ஒரு வழியாய் வெட்டி ஒட்டி youtubeல் வலையேற்றுவதற்குள் நவம்பர் மாதம் வந்துவிட்டது!!). நான் அதற்கு தொடுப்பு குடுத்து பதிவ போடறதுக்குள்ள தமிழ்விழி திரட்டி காமெடியில் வந்துவிட்டது. இருந்தாலும் ரசிக பெருமக்களுக்காக இந்த பதிவில் மீண்டும்.

நாங்க ரெடி, எடுங்க போட்டோவ!

















இந்த புகைப்படத்தை நண்பர் அனுப்பிவைத்திருந்தார். இதை பின்னால் நின்று படமெடுத்த அந்த புகைப்படக்காரருக்கு, "ஹாஸ்ய உணர்வுச்சக்கரவர்த்தி" என்ற பட்டம் வழங்கப்படுகிறது.

பிகு: நிச்சயமாக சொல்லிக்கொள்ள விரும்புவது இதில் எந்த உள் நோக்கமும் இல்லை. படத்தை பார்த்தால் சிரிப்பு வருமா வராதா?

2005ம் ஆண்டுக்கான மகாமடத்தன பட்டம்

அயர்லாந்துக்காரகள் தட்டிச்சென்றனர். கீழே அதற்கான அத்தாட்ச்சி:




முதலில் விழுந்தது கார்..


அதனை எடுக்க வநது இரண்டாவதாக விழுந்தது கிரேன்..






முதலில் விழுந்த கிரேனை எடுக்க வந்த இரண்டாவது கிரேனும் மூன்றாவதாக..

பிகு: கர்ம சிரத்தையாக இதனை புகைப்படமெடுத்த புண்ணியவான சீன்லேந்து அடிச்சு விரட்டிட்டதால நாலவது அஞ்சாவது எல்லாம் படமெடுகக் முடியாம போச்சாம்.

விலங்குகள் மேல் அன்புள்ளவர்களுக்கு

இது நடந்து கிட்டத்தட்ட 9 மாதங்களிருக்கும். சுனாமியால் பாதிக்கப்பட்டது மனிதன் மட்டுமில்லை சில மிருகங்களும்தான். என் நண்பன் சென்னையில் அப்போதுதான் பிறந்த அனாதையாகிப்போன அந்த நாய் குட்டியை வீட்டுக்கு எடுத்துச் சென்றிருக்கிறான். பின்பு ஒரு மிருக வைத்தியர் அது டாஸ்ஹெண்ட எனப்படும் நல்ல உயர்ந்த ஜாதி நாயென்றும் சொல்லியிருக்கிறார். இப்போது இந்த நாய்க்கு ஒரு நல்ல வீடு தேவை. விலையேதுமின்றி இனாமாகக் கொடுக்க தயாராக இருக்கிறான். இவர் ஏன் இந்த நாயை குடுக்கிறாரென்றால் இவரது மனைவி உடை மாற்றும் போது தன்னை முறைத்துப்பார்க்கிரது என்ற வினோதமான குற்றம் சாட்டுகிரார். இது மிகவும் விசித்திரமான கற்பனைதானென்றாலும் வீட்டிலே இருக்கக்கூடாது என கூறிவிட்டதால்
வேறு வழியின்றி கொடுத்துவிட முடிவுசெய்துள்ளார். மற்றபடி குழந்தைகளுடன் அன்யோன்யமாக விளையாடும். ஆகவே யாருக்காவது வேண்டுமானால் என்னை தொடர்புகொள்ளவும். உங்களுக்கு இதனை நண்பர் தன் சொந்த செலவிலேயே அனுப்பி வைப்பார்.

அட பாருங்கள் மறந்தேவிட்டேன், அந்த நாயின் புகைப்படம் கீழே உள்ளது.






















ஒரு புன்னகையாவது வந்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.

வரப்போறரய்யா வரப்போறாரு..

பொன்மொழிகள் பத்து







செப்டம்ப்ர் 14

"இனிமேல் அந்த நாள் தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான நாளா மாறிடும்"!

"நம்பிக்கைதானேங்க வாழ்க்கை"!

"எனக்கு அரசியல் தெரியாதுன்னு சொல்றவங்களைப் பார்த்து சிரிப்புதான் வருது"!

"எல்லா கட்சிகளையும் எல்லா தலைவர்களையும் நம்பி ஏமாந்து மக்கள் சலிச்சுட்டாங்க"!

"நான் பெண்டாட்டிகூட போகாம மத்தவங்ககூட போனாதான் அது தப்பு"!

"என் பிரச்னையையே என்னால தீர்துக்க முடியலைன்னா அப்புறம் மக்கள் பிரச்னையை எப்படி தீர்பேன்"!

"இதெல்லாம் பொது வாழ்க்கைக்கு கொடுக்கற விலை"!

"கல்யாணம் பண்ணிப்பார் வீட்டைக் கட்டிப் பர்ரனு சொல்லுவாங்க. கட்சி தொடங்கிப்பார் மாநாடு நடத்திப் பார்ங்கிறாதையும் அதோடு சேர்த்துக் கலாம்னு தோணுது"!

"நாமெல்லாம் ஜெயிக்கப் பொறந்தவங்க"!

"மத்தவங்க சரிய பண்ணலைனு குறை சொல்லிட்டே இருக்கிறது பழைய ஃபேஷன்"!

இதெல்லாம் யாரு சொன்னாங்கோ அதுக்கு கரீக்டா இன்னா அர்த்தம்னு சொன்னா
செப்டம்பர் 14 மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவில்ல பொத்தாமறை குளத்துல வச்சு பொற்க்கிழி கொடுக்கப்படும்.