Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

காற்று புதிதாய்

மனுஷனோட சில கண்டுபிடிப்புகளில், இதுக்கு மேல இதுல மேம்படுத்த ஒண்ணுமில்ல அப்படின்னு பல உபகரணங்கள் இருக்கிறது. அதுல ஒண்ணு இந்த மின்விசிறி. நமக்கு ரொம்ப பழகிப் போனது, மூன்று அல்லது நான்கு பட்டை(??)(fan blades) வைத்து, பல வகைகளில்.
இந்த மேசை மின்விசிறியில் ஒரு முக்கியமான் குறைபாடு என்னவென்றால் பாதுகாப்புக்காக கம்பி வலை இருந்தாலும் சில சின்னஞ்சிறிசுகள் விசிறி சுற்றும் போது விரலை நுழைத்து பார்க்க மிக ஆவலாக இருப்பார்கள். தவிர சிலது காத்து வருதோ இல்லயோ மகா சத்தம் போடும். ஆக மின்சாரத்தை வீணடித்து மிக குறைந்த ஆற்றல் (efficeincy) கொண்ட இந்த மாதிரி விசிறியை பிரிட்டனை சேர்ந்த ஜேம்ஸ் டைசன் (பை இல்லா தூசு உறிஞ்சி bagless vacuum cleaner கண்டுபிடித்தவர்) ஆராய்ச்சி செய்து இப்போது படத்தில் உள்ளது போல் பட்டைகளே இல்லாத மின்விறியை கண்டுபிடித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார். இருநூற்றுக்கு சில செண்டுகள் குறைவான பவுண்டுகளுக்கு இந்த வருட கிருஸ்துமஸ்க்கு மிக சிறந்த பரிசாக கொடுத்தாலும், நாலு மாசம் கழிச்சுதான் இங்க ஐரோப்பால ஊர்ல இத உபயோகப்படுத்த முடியும். குளிர்ல மின்விசிறியா?? ஆனா இது நம்ம ஊருக்கு மிக தேவையான உபகரணம்.

இதுக்கு இணையா தமிழ்மணத்த உருவாக்கின காசி ஆறுமுகத்தின் இடியாப்ப-மாயாஜாலத்தை கூறலாம்

”வெள்ளக்காரன் நீராவில இன்ஜின், கப்பல் விடுறான் இங்க என்னடான்னா இட்லியும் குழா புட்டும் பண்ணி உள்ள தள்ளரான்”...என்று எம்.ஆர் ராதா சொன்னது ஏனோ இந்த இடத்தில் தவிர்க்க முடியவில்லை, நிசமாவே உள்,வெ - கு எதுவுமில்ல, தவறாக சொல்ல வில்லை.

சரி இந்த பதிவு இப்படி தொழில் நுட்பம் என்று ஆகிவிட்டதால், மேலும் ஒன்றை பற்றி எழுதலாம் என்று தோன்றுகிறது.

நாம தினப்படி உபயோகப்படுத்தும், ஒட்டும் பட்டை அதாவது sticky tape அல்லது செலோ டேப் எக்ஸ் கதிர் வீச்சை வெளியிடக் கூடியவை என்று சொன்னால் பாதிபேர் அடுத்த முறை அதை கொஞ்சம் பயந்து கொண்டுதான் கையாளுவார்கள். எனினும் பயப்படத்தேவையில்லை. தகுந்த முறையில் அதாவது காற்றழுத்தம் குறைந்த வெளியில் இந்த டேப்பை உறித்து எடுக்கும் போது இவை எக்ஸ்-கதிர்களை வெளியிடும் என்பதை கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் முன்பாக இதை கண்டுபிடித்தாலும் சென்ற வருடம் அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் இதனை முறையான பரிசோதனை மூலம் நிரூபித்திருக்கிறார்கள். இப்போது இதை வைத்து குறைந்த விலையில் கையடக்க எக்ஸ்-ரே கருவிகளை கொண்டுவர முடியுமா என இதை தீவிரமாக மறு ஆராச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆக Old is gold... பழசா இருந்தாலும் புதுசா எதாவது செய்ய முடியும், உட்கார்ந்து படுத்து யோசிக்க வேண்டும்...

பீட்டாவால் பாதிக்கப்பட்டவர்கள்...

இது ஏதோ சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் ரேஞ்சுக்கு இருக்கேன்னு நினைக்கப்படாது. நாங்கள்ளாம் எழுதலேன்னா அப்புறம் என்ன ஆகும் இந்த வலையுலகம்? ஆணிக்கு ஒருதரம் அம்மாவாசைக்கு ஒருதரம்னு எழுதினாலும், அதுக்கும் ஆப்பு வைக்கும் விதமாக பீட்டா வந்து சேர்ந்தது.

பிளாகர் பீட்டா, இதில் என்னத்த புதுச இருக்குன்னு இன்னும் விளங்கல. ஆனா ஆங்கிலம் தவிர்த்து பிற மொழி சேவை இன்னும் வரவில்லை. அதனால் அநேக தமிழ் மக்கள் பாதிகப்ப்பட்டனர். இதுல என்னா வேடிக்கைன்னா ஆளவுடு சாமி நான் பழைய பிளாகருக்கே போயிர்றேன்னா அதுவும் முடியாதாம். ஒன்வே மாதிரி. அதுனால புதுசா ஒரு வலைத்தளம் ஆரம்பிக்க வேண்டிதா போச்சு. ஒரு வலைல எழுதரதுக்கே நேரமில்ல (விஷயமும் இல்ல) இதுல இன்னுமொன்றான்னு ஆகிப்போச்சு. அந்த நேரத்துலதான் தமிழ்மண நிர்வாகிகளிடமிருந்து பீட்டாவுக்கான தற்காலிக நிரல் தூண்டி வந்தது. அதனை சோத்தித்து பார்கத்தான் இந்த பதிவு. ப்பு இதுதானா விஷயம்னு போயிராதீங்க ஒரு வார்த்தையாவது பின்னூட்டம் விடுங்க அதுவும் வேல செய்யுதுதான்னு பாக்கனும். இவ்வளவு தூரம் வாசிச்சதுக்கு நன்றி.

ப்ரியதர்ஷினி என்னும் மாய கண்ணாடி

சமீபத்தில் மாயாபஜார் பார்த்தேன் (வட்ட சொந்தமா காசு கொடுத்து வாங்கினது, சும்மா வந்ததில்லை. என்ன ஆச்சு இவனுக்குன்னுனெல்லாம் நினைக்காம மேல படிங்க) இப்ப இருக்கற ஹைடெக்கெல்லாம் நம்ம மகாபாரத்துலசும்மா சர்வசாதாரணமா உபயோகிச்சுருக்காங்கன்னு பாக்குறப்போ ஒரே புளங்காகிதம் பிச்சுக்கிட்டு இத எழுத ஆரம்பிச்சுட்டேன்னா பாருங்களேன்.

காட்சி இதுதான். இடம் இப்போ தண்ணிக்கு அடில போய்ட்ட துவாரகை:

கிருஷ்ணன்(NTR) ஹஸ்தினாபுரத்திலிருந்து வருகிறார். பலராமனின்(பாலசுப்ரமணியன்) புத்ரி வத்ஸலா(சாவித்ரி) சந்தோஷமும் நானமும் பொங்க ஓடிவருகிறாள். கிருஷ்ணன் சிரித்துக்கொண்டே பாண்டவர்கள் கொடுத்தனுப்பிய பரிசுப்பொருட்களை ஒவ்வொன்றாக ஒவ்வொருவருக்கும் கொடுக்கிறார். கடைசியில் அவளை கூப்பிட்டு அர்ஜுனன் மகன் அபிமன்யு(ஜெமினி) உனக்கு இதை கொடுத்தான் என ஒரு பேழையை (அதாம்பா பொட்டி) கொடுப்பார். அதன் பெயர் ப்ரியத்ர்ஷினி என்றும், யாருக்கு எது விருப்பமோ அதை காட்டும் என கூறுவார். ஒரே வெட்க்கம் பிடுங்கித்தின்ன அதை எடுத்துக்கொண்டு உள்ளே ஒடி சென்று அந்த பேழையை திரப்பார். உடனே, அதன் மூடியின் உள் திரையில் (என்னா ரெஸ்ல்யூஷன் LCDல்லாம் பிச்சை வாங்கனும்) இளமை துள்ளளுடன் ஜெமினி (சும்மாவா காதல் மன்னன்னு பட்டம் கொடுத்தாங்க?)

நீதானா என்னை அழைத்தது
நீதானா என்னை நினைத்தது
நீதானா எந்தன் இதயத்திலே நிலைத்டுமாறி உலவியது...(கண்டசாலா இசையமைத்து சுசிலாவுடன் பாடியது)

என்றூபாட, பின்பு சாவிதிரியும் சேர்ந்துபாட ..

ஆக இன்னக்கி Laptopப்ப அன்னக்கே அபிமன்யு அனுப்பிச்சுட்டார்யா. அதுவும் சும்மாவா, வையர்லெஸ் நெட் எனேபில்டு லாப்டாப்பு, சும்மா பொட்டிய திரந்தவொடனே ஸ்க்ரீன்ல ஹஸ்தினாபூர் நெட்லேர்ந்து வெப்காமிரால அவர் பாட இங்கே துவாரகையில் இந்தம்மா இங்கன ஜாயின் பண்ணி தூள்பா.

மாகாபரத்த எழுதின கவிக்கு இன்னா தொலைநோக்குப்பா?

ஆக தமிழ்மக்கள் மடிக்கணணி அது இதுன்னு மண்டய ஒடக்காமெ இப்படி வெச்சுக்கலாம்

Laptop/Notebook - ப்ரியதர்ஷினி
Laptop/Notebook with wireless net - திவ்யதர்ஷினி

இதுல முக்கியமா என்ன கவனிக்கனும்னா இந்த படத்தோட ஒளிபதிவாளர் வி. கிருஷ்ணன், மே 5, 2005 விகடன் கற்றதும் பெற்றதும்-ல சுஜாதா மெச்சியிருக்கர மாதிரி மிக அழகாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். முக்கியமாக இந்த லாப்புடாப்பு ஜிங்கிடி சாமாச்சாரமெல்லாம் அப்போவே சினிமால காட்டறதுன்னா பெரிய விஷயம்தான். வாழ்க கிருஷ்ணன் புகழ்.