நீங்க பல மணியை பாத்திருப்பீங்க, ஆனா இங்கே வெலிங்டன் Te Papa எனும்

அருங்காட்சியகத்தில் எப்படி, எந்த காலத்தில் இந்த மணி வந்தது என்பது இன்னும் புதிராகவே உள்ளது. இருந்தாலும் ஒரு தமிழன் இவ்வளவு தூரம் கப்பல் பயனத்தை அப்போதே செய்திருக்கிறான்னு பாக்கரப்போ புல்லரிச்சு போச்சு போங்க.
தமிழ் மணி (புகைப்படம் நன்றி Te Ara, Wellington, NZ)
மேற்கொண்டு இதப் பத்தி நா ஒண்ணும் பிரஸ்தாபிக்க வேண்டாம்னு சகோதரி சந்திரலேகா அவங்க வலையான
புத்துயிர்ப்புல ஏற்கனவே எழுதிருக்காங்க. ஆனா பாருங்க படம் போடல. (அதான் நீ பிலிம் காட்றியோன்னெல்லாம் முனுமுனுக்க கூடாது) அங்கன யாரும் படிச்சாப்புல தெரியல அதனால ட்ராஃபிக்கை அங்கே திருப்புறேன். வலை மகா ஜனங்கள் அங்கே படித்து இங்கேயும் பின்னூடமிடலாம்.