Showing posts with label புகைபடம். Show all posts
Showing posts with label புகைபடம். Show all posts

உறையும் யூக்கே

பனின்னா பனி செம பனி, மொத்த நாடும் ஏதோ ஆர்டிக் பிரதேசம் போல் பனிப் போர்வைக்குள் உறைந்துவிட்டது. விண்வெளியிலிருந்து பனி மூடிய யூக்கே படத்தை நாசா வெளியிட்டுள்ளது



நேற்று ஸ்காட்லாண்டில் -22 C! கிட்டத்தட்ட தென்துருவம் போல்.
இன்று காலை பனிமூட்டம் விலகிய பின் சூரியன் எட்டி பார்த்து சூழலை மிக ரம்மியமாக்கியதை கைப்பேசி காமிராவில் பிடித்த சில படங்கள்









கடைசியா

பனி விழும் காலம்


இந்த வாரம் முழுவதும் பனி பொழிந்து கொண்டே இருக்கிறது,

காரை கிளப்புவதற்கு ஒரு கால்மணிநேரம் செலவிட வேண்டியிருக்கிறது,

சாலை வழுக்குகிறது, கவுன்சிலிலிருந்து சாலையில் போடுவதற்கு உப்பு கொண்டுவந்து மஞ்சள் பெட்டியில் ரொப்பி வைக்கிறார்கள்,

போக்குவரத்து ஆங்காங்கே ஸ்தம்பித்துவிட்டது, ரயிலும், விமானங்களூம் தாமதமாகிறது,
கிருஸ்துமஸ் விடுமுறை பிரயானம் இதனால் இந்த வருடம் மிகவும் பாதிக்கப்பட்ட்டுள்ளது.


எதற்கு ஸ்கீ ரெசார்ட்டை தேடி போக வேண்டும், சறுக்கி விளையாடு ராசா என்று வீட்டு வாசாலில் கொண்டு கொட்டி வைத்திருக்கிறது




சாதரண கம்பி கேட்டுதான் ஆனால் இந்த பனியின் பின்னனியில் அழகான கோட்டு ஓவியம்.

கடந்த பத்து வருடங்களில் இந்த வருடம் பனி சற்று அதிகம் என்று வானிலை வல்லுனர்கள் புள்ளிவிவரம் சொல்லுகிறார்கள். கோப்பன்ஹேகனில் எப்படியாவது கிருஸ்துமஸ்சுக்கு ஊர் போய் சேர வேண்டும் என்று எந்தவிதத்திலும் அதிகாரமில்லாத ஒரு சப்பை தீர்மானத்தை நிறைவேற்றி விட்டார்கள். இன்னும் பத்து வருடங்கள் கழித்து இப்படி ஒரு பனி இங்கு விழுமா என்பது சந்தேகமே

நான்காட்டும் பிலிம் ....புகைப்பட போட்டிக்கு

ஆமா அது என்னங்க "தழிலில்" புகைப்படம்?

படதுக்கு மொழி
மெளனம் தான்

நாமதான் புரிஞ்சுக்கனும்



ஏற்கனவே பதிவுல போட்டதுதான், மறுபடி .. மோனார்க் பட்டாம் பூச்சி..





NZ தெற்கு தீபகற்பத்தில் வெஸ்ட்போர்ட் என்னுமிடத்தில் எடுத்தது..