Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

குழந்தையிடம் பந்தை தந்தால் என்ன செய்யும் ??

இன்று யாஹூ தலைப்பு செய்தியாக பிலிடெல்பியா மாஹானத்தில் நடந்த ஒரு பேஸ்பால் போட்டியின் போது அதில் விளையாடிய பில்லீஸ் என்னும் டீமின் ரசிகர், நம்ம கிரிக்கெட்டில் அவ்வப்போது அடிக்கும் சிக்ஸர் போல அடிக்கப்பட்ட ஒரு பந்தை (பேஸ்பாலில் இப்படி அடித்தால் foul என்று சொல்லுவார்கள்) பிடிக்க நேர்ந்தது. இப்படி பந்து வருவதே அபூர்வம் அதையும் பிடிக்க முடிந்தால் அது அதைவிட ஆபூர்வம் போலிருக்கிறது. பிடித்த உற்சாகத்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த நண்பர்களுடன் `ஹை பைவ்` தட்டிய பின்அந்த பந்தை தன்னுடை மூன்று வயது குழந்தை எமிலியிடம் கொடுக்க அதை அந்த சிறு பெண் தடுப்பு சுவரை தாண்டி மீண்டும் மைதானத்துக்குள்ளேயே விட்டெறிய இதை சற்றும் எதிர்பார்க்காத அப்பா ஒரு புன்முறுவலுடன் தன் பெண்ணை கட்டி அணைத்துக் கொண்டதை நேரடி ஒளிபரப்பில் கண்ட பல லட்சம் அமெரிக்கர்கள் புளங்காகிதமடைந்து விட நேர்ந்து இப்படி தலைப்பு செய்தி ஆகிவிட்டிருக்கிறது.



பில்லீஸ் ரசிகர்கள் காட்டான்கள் இல்லை இப்படி அன்பானவர்கள் என்று வேறு டிவி செய்தியாளர் மேலும் ஒரு விவரம் தருகிறார்.

எனினும் மிகவும் கவித்துவமாக ஒரு குறும் படம் போல இருக்கிறது. இதனை பதிவு செய்த அந்த காமிராமேனை பாராட்ட வேண்டும்.

இந்தியா டுடே வயது 30

இந்தியா டுடே ஆரம்பிச்சு 30 வருட நிரைவு இதழாக ஜுன் மாத இறுதியில் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்தியாவை பற்றிய சில பிரமிக்கத்தக்க புள்ளிவிவரங்கள் அதில் தொகுத்திருந்தனர். அதில நல்லது கெட்டது கண்றாவியானது என சில...(வரிசை படி அல்ல)

1.25 வினாடிக்கு ஒரு குழந்தை பிறக்கிரது (ஆணகள் Vasectomy செய்துகொள்வது நலம்)

இந்தியாவின் ஜனத்தொகை ஆண்டுதோரும் சுமார் 15,300,000 ஆக கிட்டத்தட்ட சிலி நாட்டின் மொத்த ஜனத்தொகைக்கு ஈடாக கூடுகிரது (நல்ல முதலீடு)

சுமார் 2,400,000 மத பிரார்த்தனை இடங்கள் (கோவில், தர்க்கா, சர்ச், ...) இந்தியாவில் உள்ளன. (இன்னும் ராமர் கோவில் ஒண்ணுதான் பாக்கி)

1,019,916 பள்ளிகள் 2003-04 கணக்கு படி. 65% படிப்பறிவு (உண்மைதானா?)

லக்னோ நகர மாண்டிசோரி பள்ளி 2002 வருட கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றது, காரணம் பள்ளியின் மொத்த மாணவர் 26,312 (அப்பா சாமி இது பள்ளிக்கூடம்தானா? தல சுத்துது அப்போய்)

2005ம் வருடம் 1,350 டன்(மெட்ரிக்) ஓபியம் சட்டரீதியாக தயாரிக்கப்பட்டது. (ம்ம்ம் சரிதான் ராகுல் மாஹாஜன் ஏன் மாட்டிக்கிட்டாருன்னு புரியுது)

155,516 நிரந்தர தபாலாபீஸ்கள் இந்தியாவில் இதுவே சீனாவில் 63,555 தான்(ஹை!!).

சராசரியாக ஒரு மாதத்துக்கு 5,000,000 மொபைல் போன் தொடர்புகள் ஏற்படுத்தப்படுகின்றது.(பொதுவா ஒண்ணு, மத்ததுக்கு ஒண்ணுன்னு ஒரே ஆள் ஏகப்பட்டது வச்சுக்கிட்டா வராதா பின்ன?)

இந்தியன் ரயில்வே 1,400,000 மக்களை பணியிலிருத்தி உலகிலேயே மிக அதிகமான தொழிலாளர்களை கொண்ட நிறுவனமாக இருக்கிரது. (இதயும் டிஸ்-இன்வெஸ்மெண்டுன்னு வீட்டுக்கு அனுப்பிச்சுரப்போறாய்ங்க)

30,000,000 குழந்தை தொழிலாளர்களை கொண்டு மிக அதிகமான குழந்தைகளை தொழிலிலிருந்த்தும் நாடாகவும் இருக்கிரது. (1.25 செகணடுக்கு ஒண்ணு பிற்ந்தா என்னாதான் செய்யிரது?)

70,000,000 ஒரு பால்-இன சேர்க்கை (gays and lesbians) மற்றும் பாலின மாறுதல் செய்து கொண்டவர்கள் இருக்கிறார்கள்.(அட, சொல்லவே இல்ல)

ஏறத்தாழ 650,000,000 விவசாயிகள் உள்ளனர்.(மழை வருதான்னு வானத்த பாத்துக்கிட்டு ..)

Transparency International நிறுவன 2005ம் ஆய்வுப்படி 159 நாடுகளில் இந்தியா 92ம் இடத்தில உள்ளது. 0 - 10 என்னும் அளவு கோலில் இந்தியா பெறுவது 2.9. (எப்படி 2.9 வாங்கிச்சு, ஏதோ சம்திங் குடுத்து)

403 உறுப்பினர்கள் உள்ள உ.பி சட்டசபையில் பாதிக்கும் மேலானவர்கள் அதாவது 205 உறுப்பினர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது. (மீதி பேர் இப்பதான் எல்-போர்டு)

7 இந்தியர்கள் இதுவரை நோபல் பரிசு வென்றுள்ளனர்.(தப்பி பிறந்தவர்கள்)

13 பிரதம மந்திரிகளில் 8 பேர் உ.பி மாகாணத்தவரிகள்: ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி,இந்திரா காந்தி, சரண் சிங், ராஜீவ் காந்தி, வி.பி.சிங், சந்திர சேகர், வாஜ்பேயி (அடப்பாவிகளா வேற மாகாணமே இல்லயா இந்தியாவில்?)

உதவி தேவை

மக்களே இசையமைப்பாளர் MB ஸ்ரீனிவாசனை (PBS என்று பலர் குழப்பிக் கொள்வார்கள்) பலருக்கு தெரிந்திருக்கும். தெரியாதவர்கள் இந்த தூளில் தெரிந்துகொள்ளலாம். நான் கேட்டக்க வந்தது mbs பாரதியாரின் பாடல்களை choir (சேர்ந்திசை?) முறையில் இசையமைத்து எழுபது, என்பதுகளில் வானொலியில் இளையபாரதம் என்னும் நிகழ்ச்சியில் காலையில் ஒலிபரப்புவார்கள். பாரதியின் பாட்டுக்குக்கு உணர்வு கொடுத்தது mbs தான் என்பது என் தனிப்பட்ட கருத்து. கேட்க்கும் போதெல்லாம் புல்லரிக்கும். கிட்டத்தட்ட பாரதியின் இருபது பாடல்களுக்கு மேல் இந்த முறையில் இசையமைத்துள்ளார். அவர் நிறுவிய madras youth choir (இன்றுமிருக்கிரது என நினைக்கிறேன்) மூலமாக இப்பாடகள் ஒலிபரப்பாகும். நான் கேட்க்க வந்தது இப்பாடல்கள் (choirs) அடங்கிய கேசட், அல்லது வேறு வடிவில் யாரிடமாவது அல்லது எங்காவது கிடைக்குமா? இப்பாடல்களை வணிகரீதியாக mbs வெளியிடவேயில்லை என நினைக்கிறேன். தெரிந்தால் தொடர்புகொள்ளவும். இங்குள்ள குழந்தைகளை இப்பாடல்களை பாடி பழக்க எண்ணம். (இதன் மூலமாக பாரதியின் பாடல்கள் அடுத்த தலைமுறைக்கு அறிமுகமாகும்).

நன்றி.

"மால்" என்னும் ராட்சச இயந்திரம்...

இந்த வார இறுதியில் இங்கு பக்கத்திலுள்ள "Mall" எனப்பட்டும் ஒரு வணிக மையத்துக்கு சென்றிருந்தேன். ஒரு 8 மதங்களாக மற்றியமைக்கும் பணி நடந்துகொண்டு வருகிறது. ஒரே தளத்திலிருந்த பார்க்கிங்கை இரண்டு தளமாக்கி மேலும் கடைகளை விரிவு படுத்தி வேலை என்னமோ இன்னும் முடிந்த பாடில்லை. நான் பாட்டுக்கு பழைய விதத்திலுருந்த மால் நினைப்பில் ஒரு நுழைவாயில் புகுந்து கடைகளை பார்த்துக்கொண்டே போகையில் புதிய சுவர் எழுப்பி "மன்னிகனும் அப்படியே வந்த வழியால போயி நீங்க நுழஞ்சதும் விட்டீங்க பாருங்க ஒரு "தானியங்கி படி" (அதாங்க escalator) அதுல போனின்னா இன்னும் கடைகள் கீது" ன்னுச்சு. சரிடான்னு போனா அங்க அந்த படிகிட்ட இன்னொரு பலகை வச்சு இன்னின்ன கடைகள் அப்படியே மாலுக்குவெளில போய் லெப்ட்ல போனின்னா வந்துடும்னுச்சு. சரிதான் அங்க போனா, "மவனே நீ-லா இன்னாத்துக்கு வந்தே சும்மா ஜன்னல நின்னு ஜொள்ளுவுட்டுட்டு போயிடப்போறே பேசாம பார்க்கிங் போயி கார எடுத்துட்டு வீட்டுக்கு போயிரு"ன்னு இன்னொரு பலகா வச்சாலும் ஆச்சர்யபடுறதுக்கில்லேன்னு, மேலே ஏறிப்போயிட்டேன். அப்படி போகரச்சேதான் முன்னால மால்கம் க்லாடுவெல் (Malcolm Gladwell) எழுதிய ஒரு கட்டுரை ஞாபகத்துக்கு வந்தது.

இந்த மாதிரி "மால்" என்னும் கூட்டுக் கடை அமைப்பை முதன் முதலில் நிறுவியவர் விக்டர் க்ரண் (Victor Gruen) என்பவர். ஆஸ்த்ரியவிலுள்ள வியன்னாவிலிருந்து கையில் வெறும் 8 டாலர்களும் கட்டிடக் கலைக்கான பட்டமுமாக அமெரிக்காவில் குடியேறிய இவர் 1954ல் ஏற்ப்படுத்திய இந்த மாலானது, இன்று இந்தியவிலும் பல நகரங்களில் வரத்துவங்கி, மாபெரும் புரட்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இவரை தொடர்ந்து, அல்ப்ரெட் தப்மேன் (Alfred Taubman) இதனை மேலும் சில மாறுதல்கள் செய்து செம்மையாக்கினார். ஒரு மால் என்பது எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணங்கள் இவர்கள் ஏற்படுத்தியதே. இரண்டு தளங்களுக்கு மேல் இருக்கக் கூடாதென்பதும், கடைகளை எதுவும் மறைக்கக் கூடாதென்பதும், உண்ணும் விடுதிகள் எங்கே இருக்க வேண்டும் என்பதும், இவர்கள் ஏற்படுத்திய சில முக்கிய விதிகள். வாடிக்கையாளருக்கும் பொருளுக்குமிடையில் எந்தத் தடைகளுமிருக்கக்கூடாதென்பதால் மிக கவனமாக வடிவமைத்தன்ர். இதனை "உச்சக்கட்ட தடைகள்" (threshold resistance) என குறிப்பிடுகிறார்கள். இதனால்தான், முதல் தளத்திலிருந்து இரண்டாம் தளத்திலுள்ள கடைகளிலுள்ளவற்றையும்காண வசதியாய் கண்ணாடிகளால் ஆன கைப்பிடிகளை அமைத்தனர். மிக விரிந்து ஒரே தளத்தில் பரந்து விரிந்து மால் அமைத்தால், வாடிக்கையாளர் சோர்ந்து போய் மெக்டொனாலாட் ஹாப்பி மீல் வாங்கி சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குபோய் விடக்கூடுமாகையால் அதிகபட்சமாக இரண்டு தளத்தையமைப்பதால், ஒரு வழியாக வந்து கீழ்தளத்தை கடந்து கடைசியிலுள்ள எஸ்கலேட்டர் வழியாக மேல் தளத்துக்கு வந்து மீண்டும் கீழே வரும்படி இருந்தால் வாடிக்கையாளர் மாலிளுள்ள எல்லா கடைகளையும் பார்க்கும் வாய்ப்பு அதிகம் என வகுத்தனர்.இவர்களது அமைப்புப்படி ஒரு மால் எப்படியிருக்க வேண்டுமென்றால் எலிப்பொறி போன்று "வடிக்கையாளர் பொறி" (customer trap) யாக இருக்க வேண்டும்.

தான் பிறந்து வளர்ந்த வியன்னாவில் எப்படி நகர்புறம் அமைந்திருந்த்தோ அதே போன்று தான் சுவீகரித்த நாடான அமெரிக்காவில் புற நகரங்களையும் அமைக்க எண்ணித்தான் இந்த மால் என்னும் கடையமைப்பை க்ரண் உருவாக்கினார். ஆனால் இதில் முதலீடு செய்தால் பெரும் லாபமீட்டலாமென பலர் முதலீடு செய்தனர். பின்னால் அரசாங்கமும் விரிச்லுகைகளிக்க அதுவே காட்டுத் தீ போல பரவி இப்போது எங்கு பார்த்தாலும் மால்தான். கடல்போன்று கார்களுக்கிடையே மால்களிருப்பதை பார்த்து மிகவும் நொந்து போய்விட்டார் க்ரண். அமெரிக்காவின் புற நகர்கள் "பீதியடையச்செய்யும் வீதிகள்" நிறைந்ததாகயிருக்கிறதென்று வருனித்தார். ஒரு வகை தன்னுணர்வு தாக்குதலுக்கு ஆட்பட்டு தன்னுடைய சொந்த ஊரான வியன்னாவில் ஒரு கிராமப்புறத்தில் வீடு கட்டிக்கொண்டு போய்விட்டார். ஆனால் அங்கு என்ன நடந்தது? வியன்னாவின் புறநகரில் பெரிதாக மால் அமைக்கும் பணி துவங்கியது. "ராட்சச ஷாப்பிங் இயந்திரம்" என க்ரண் வருணிக்கும் இது தன் வியன்னாவின் சிறிய கடைக்காரர்களையும் நகரத்தின் உயிரையுமே நசுக்கிக்கொண்டிருந்தது. இது க்ரண்னை மிகவும் அதிச்சிக்குள்ளாக்கியது. விக்டர் க்ரண் அமெரிக்காவை வியன்னா போலாக்க "மாலை" கண்டுபிடித்தார். ஆனால் நடந்ததென்னவோ வியன்னா அமெரிக்காவாகிக்கொண்டிருக்கிறது. இது இந்தியாவுக்கும் பொருந்தும்.

இதன் ஆங்கில மூலம் இங்கே The Terrazzo Jungle சுட்டவும்.

பேச்சின் பேறாற்றல் பேராற்றல்!

மேல்மாடி கலகலத்துக்கொண்டிருக்கிறதேன்னு கொஞ்சம் ரொப்புவோம்னு மேஞ்சதுல யூதகுலத்தின் ஆணிவேரான தோரா என்னதான் சொல்லுதுன்னு பார்த்தப்போ
இது கிடைச்தது, சரி நல்ல விஷயமாயிருக்கேன்னு இங்க இடறேன்பா, இதயும் "லொஷான் ஹராவா" (படிச்சப்புரம் புரியும்) நினைக்கக்கூடாது.

பேச்சின் பேறாற்றலை பற்றி தோரா என்ன கூறுகிறதென்றால், பேச்சு ஆக்குவதற்கான கருவி. அதே சமயம் பேச்சால் அழிக்கவும் முடியும். வாழ்வும் சாவும் நாக்கிலே (அல்லது வாக்கிலே)
நாம் அன்றாடம் பேச்சு வழக்கில் உள்ள சில வற்றை "லொஷான் ஹரா" என்றழைத்து பட்டியலிட்டுள்ளார்கள்:

1. இருந்தலும் அது நிஜம்தான்..
2. நான் அவன்(ள்) பேர சொல்லவே இல்லையே..
3. இதையே வேர யாராவது என்னப்பத்தி இத மாதிரி சொல்லியிருந்த கண்டுக்கவேமாட்டேன்..
4. அதான் எல்லாருக்கும் ஏற்க்கனவே தெரிஞ்சுபோச்சே...
5. அவன்(ள்) ஒன்னும் நினைக்க மாட்டான்(ள்)..
6. அவன்(ள்) மூஞ்சிலேயே சொல்லிருவேன்..
7. சும்மா சொன்னேன்..
8. அந்த ஊர்காரனா...
9. இதெல்லாம் தொழில் போட்டில சகஜம்..
10. இத சொல்ல கூடாதுதான் ...
11. ஏன்ட்ட சொல்லாமே..
12. மெளனமாய் விழியை மட்டும் உருட்டுவது

இவை எல்லாம் தவிர்க்கப்பட வேண்டியவை. மேற்கூறியவைகளை கூறுவதால் ஆக்கபூர்வமாகவோ அல்லது எந்தவிதமான சேதாரமோ ஏற்படாத பட்ச்சத்தில் சொல்லிக்கலாம்னு ஒரு எக்ஸப்ஷன் கொடுத்திக்காங்கோ.

தினப்படி சத்தியம்தானா?
லொஷான் ஹாராவ தவிர்த்து, உங்க கருத்த சொல்லுங்க மக்களே.

மனதும் மூளையும்

மனதுக்கும் மூளைக்கும் என்ன வித்யாசம்?

தெரியுமா?

BBC மன்றத்தில் இப்படி போகிரது விவாதம்:

மூளை இடம், காலத்துக்கு கட்டுப்பட்டது, ஆனால் மனதுக்கு இந்த கட்டுப்பாடு இல்லை.

உதாரனமாக கணணியை எடுத்துக்கொள்வோம். CPU, மானிட்டர் இத்தியாதி மூளை என்றால், இதன் ஊடாக இயங்கும் வலை (internet) என்பது மனம். அதனுள் இருக்கும் அறிவும், வெளித்தொடர்பு கொள்ளும் ஆற்றலும் மனதுக்கு ஈடாகக்கொள்ளாம். இடம் நேர கட்டுப்பாடு இல்லை.

இப்படி யோசிக்கும்பொழுது, வலையின் பிரம்மாண்டம் மிகபெரிதாக தோன்றுகிரது.