Showing posts with label செய்தி விமர்சனம். Show all posts
Showing posts with label செய்தி விமர்சனம். Show all posts

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு?

கஷ்மீரா காஷ்மீரா? எது சரி ? இதுவே பெரிய பிரச்னையா இருக்கும் போலருக்கே?

ஆனா அசல் பிரச்னைக்கு தீர்வு "எக்கேடும் கெட்டு போ" என்று அதை துறந்து விட வேண்டும என்று இந்த வார விகடன் க.பெ.யில் சுஜாதா கூறுகிறார்.

துறந்துவிடனுமா இல்ல மறந்துவிடனுமா? இது எப்படி தீர்வாகும்? என்ன ஆச்சுன்னு தெரியல இவருக்கு. இத வெச்சு ஜல்லியடிப்பாங்கோன்னு எதிர் பார்த்தே இத மாதிரி எழுதராரோ? (வைகை புயல் ஸ்டைல்ல சொல்லனும்னா "உக்கார்ந்து யோசிப்பாய்ங்களோ?") .

புனிதத்தையே புனிதமாக்கும் கோமாளிகள்

இன்று தினமணியில் இந்த செய்தியை படித்தால் சிரிப்புதான் வருகிறது. அரசியலவாதிகளில் ஆரம்பித்து, புசாரிகளும் இன்னும் பலரும் மக்களை இன்னும் பல வருடங்களுக்கு மடையர்களாக வைத்துக்கொள்ள இந்த மாதிரி ஏதாவது செய்துகொண்டுதானிருப்பார்கள் போலிருக்கிரது.

கிரிகெட் என்னும் "வாம்பையர்"

இன்று ஒரு செய்தி தினமணி வெப்சைட்டில். டேவிட் பெக்கம் இங்கிலாந்து கிரிகெட் அணி தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா....

சரி இது ஏதோ தமாசுன்னு நினைத்து உள்ள போய் பாத்தா ரொம்ப சீரியஸாவே செய்தியா போட்டிருக்காங்க. செய்தி சுடச்சுட தருவதுன்னு இப்படி அடி சறுக்கர மாதிரி செய்தி வெளியிடுவது தினமணிக்கு அழகா? எல்லாம் தினகரன் எஃபக்டுன்னு தோணுது. ஆனாலும் இந்தியாவில் கிரிக்கெட் என்னும் பிசாசு மத்த விளைட்டுகளை எந்த அளவுக்கு பாதிக்கிரது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.


டிஸ்க்ளெய்மர்: யாராவது புண்ணியவான் தினமணிக்கு இத சொல்லி அத எடிட்டர் சரி பண்ணிட்டாருன்னா, இல்லியே நைனா நா போயி பாத்தப்ப சரியாதானே இருக்குனு என்ன பேஜார் பண்ணகூடாது சொல்லீட்டேன்.

என் கேள்விக்கென்ன பதில்?

துளசி எதையோ கேள்வி கேக்றாங்க இங்க இப்டி கேள்வி இருந்தா அதுக்கு தகுந்த மாதிரி பதில் சொல்ல ஒருத்தரு இருக்காரு.

சாம்பிளுக்கு:

கேள்வி: சில தியான மையங்களில் 'குண்டலினி சக்தி' என்று கூறி நமது அடிவயிற்றிலிருந்து முதுகுத்தண்டு வழியாக மேலே பயணித்து நெற்றிக்கு வந்து ஒரு 'சூப்பர் பவராக' மாறும் என்கிறார்களே அது எப்படி? அது உண்மையா?

-ஆர். பி. ராஜ்குமார். பரமக்குடி (அப்பாவி பாவம்)

பதில்: இதைப்பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. (பின்ன ஏன் பதில் எழுத வந்தே?) எதையாவது எழுதப்போய் உலகெங்கும் யோகா கிளாஸ் நடத்தி (ஜல்லியடித்துக்)(இது பதிலோட பகுதி என்னோடது இல்ல)கொண்டிருப்பவர்கள் "உனக்கு இதைப்பற்றி தெரியவில்லை என்றால் வாயையும் குண்டலினியையும் பொத்திக் கொண்டு சும்மா இருப்பதுதானே" என்பார்கள்.(இந்த லொள்ளுதாம்பா தாங்க முடில) எனக்கு தெரிந்த ஒரே ஆசனம் சவாசனம்.

(இவருக்கு உடனடியா ஒரு முக்கியமான ஆசனம் சொல்லிக்குடுக்க வேண்டியிருக்கு வாசகர்கள் யாராவது ஏற்பாடு செய்ய தாயாராய் இருந்ததால் உடனடியாக எனக்கு ஒரு செல்ப் அட்ரஸ்டு-ஸ்டாம்ப்டு கவர் வைத்து கடிதம் போடவும்).

பிகு: அன்புள்ள குமுதம் ஆசிரியருக்கு, இது மாதிரி கேள்வி பதில் எளுத என்னாலும் முடியும். இப்போ குட்டுக்றத விட 20% கம்மி சன்மானத்துல இதவிட வேடிக்கையாக எளுதுவேன். அவசியம் தொடர்பு கொள்ளவும்.

சிவசேனாவின் சமூகம்

சமீபத்தில் மும்பையில் 17 வயது பெண் காவல் நிலையத்திலேயே குடிபோதையில் இரண்டு கான்ஸ்டபிள்களால் கற்பழிக்கப்பட்டதை கண்டிக்கும் விதமாக தனது கட்சி பத்திக்க்கையான "சாம்னா"வில் இத்த கண்டிக்கறேன்னு ஆண்கள் எல்லோரும் மிருகம் போன்றவர்களேங்கற மாதிரி எழுதியிருக்கிறது. அது என்னா சொல்லுதுன்னா, கற்பழிக்கறது ரொம்ப தப்பு அதுவும் போலீஸ் ஸ்டேஷன்லேயே பண்றது மகா தப்புன்னு சொன்னாலும், இதுக்கு யார் காரணம்னா பொண்ணுங்கதான்னு ஒரே அடியாய் சொல்லுது. இது எப்படின்னாக்க அந்த காவல் நிலையத்தில நிறையா அரை குறை ஆடையோட இருக்கற பத்திக்கைகள்ள வர்ர படங்கள் இருந்துச்சாம். அதனால பொண்ணூங்க ஒழுங்கா அங்கன இங்கன காமிக்காம ஆடை உடுத்தினா ஊர்ல எவன் கற்பழிக்கப்போறான். ஆகா, இன்னா ஒரு ரீஸனிங்பா! இத்தோட விட்டுச்சா, அரை குறை ஆடையால ஒரு ஆம்பளே கவர்ந்திழுக்கப்படுகிறான் அப்போ அது யார் தப்பு? கவர்ச்சியாக ஆடை உடுத்திய பெண்ணால் கவர்ந்திழுக்கப்பட்டு எதோ ஒரு மிருக உந்துதலில் ஒரு ஆண் கற்பழித்துவிடுவதாக ஒரு காரணம் கொள்ளுமளவுக்கு இருக்கிறது இந்த கட்டுறை. ஆண்களுக்கு கட்டுப்பாடே கிடையாதா? ஆண்கள் மிருகம் போன்றவர்களா?

சேனாவின் இந்த கொள்கை, "பாரம்பரியத்தின் பாதுகாவலர்கள்" என்பதையும் தாண்டிச்செல்கிறது. ஆம்பள அப்படித்தான் இருப்பான்யா நீ ஒழுங்கா இருன்னு சொல்லுறது பெண்ணின் தனிமனித உரிமையை பறிப்பதல்லவா? இவர்களின் ஆணாதிக்க மனப்பாண்மையை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்கள். இவர்களெல்லாம் நாடாள வந்தால், ஆஹா சமூகம் எப்படி இருக்கும்?

இந்தியாவை வெளிநாட்டு மீடியாக்கள் காட்டும் விதம்

சென்ற திங்கட்கிழமை NZ-ல் ஒலிபரப்பாகும் ஒரு தொலைகாட்சி சானலில் (TV3, Campbell Live 7.30pm) விடியோ டைரி என தனிப்பட்ட நபர்கள், அதாவது freelancer, உலகத்தில் எந்த மூலையிருந்தும் அனுப்பும் செய்தி தொகுப்புகளை பற்றிய நிகழ்ச்சியின் துவக்க நாளன்றே கலாக்கத்தாவின் ஒரு பகுதியை பதிவு செய்து அனுப்பியதை காண்பித்தனர் (அனுப்பியவர் NZ-காரர்). தெருவில் குப்பை குமிந்து கிடப்பதையும், வெய்யிலின் வெப்பத்தால் அது எப்படி துர்நாற்றம் அடிப்பதையும், அருகிலேயே மக்கள் வாழ்வதையும், திறந்தவெளியில் மூலை முடுக்கில் சிறுநீர்கழிப்பதையும் அதை தவிர்க்க, ஆங்காங்கே வெவ்வேறு கடவுள் படங்களை வரைந்து வைப்பதையும், மேலும் விபச்சாரிகள் எவ்வாறு இரவில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வடிக்கையாளர்களை பிடிப்பதற்காக நிறைந்திருப்பதயும் ஏதோ வேற்று கிரகவாசிகள் மாதிரி ஒரு பின்னனியுடன் வழங்கினர். குப்பையும், இயற்கை தொந்திரவை கிடைத்த இடத்தில் இறக்கிவைப்பதும் மூன்றாம் நாட்டு நகரங்களின் அதிகப்படியான ஜனத்தொகையால் இருந்துவரும் ஒரு பிரச்சினை. இதை நியாப்படுத்தவில்லை. ஆனால் உலகின் முதல் தொழிலான விபச்சாரம் என்னமோ நம்ம ஊர்லதான் நடக்கிரமாதிரி சொன்னா எப்படி நியாயம்? ஒரு நாள் முன்புதான் இங்கே ஆக்லாண்டில் விபச்சாரிகளின் நடமாட்டம் அதிகமாகி வருவதையும் ($5- துக்கும் தாயாரக உள்ளதாக வேறு ஒரு விபரம் தந்தனர்), ஒருத்தி கொல்லப்பட்டதையும் காண்பித்தனர். இன்றைய நாட்களில் தொலைகாட்சி ஒருவரை மிகச்சுலபமாக bias (தமிழாக்கம் என்னப்பா?) செய்துவிடக்கூடிய மிக சக்திவாய்ந்த ஊடகம் என்பது யாவரும் அறிந்ததே.

ஒரு ராமகிருஷ்ணரையும், தாகூரையும், தெரஸாவையும், போஸ்-க்களையும்(சுபாஷ், ஜகதிஷ், சத்தியேந்திரநாத்) சந்திரசேரையும், சென்னையும் தந்த ஒரு மாநிலத்தித்தை பற்றி காண்பிப்பதற்க்கு இவர்களுக்கு வேறு ஏதும் இல்லாது போனது ஆச்சர்யமே. அல்லது, ஒரு நாட்டை பற்றி அறிந்து கொள்ள இவர்களது மீடியாக்கள் எடுத்துக்கொண்ட விஷயம் மிகவும் கீழ்தரமானதாக இருக்கும் போது இவர்களது ரசனையை என்னவென்று கொள்வது? இது பற்றி அந்த தொகுப்பாளருக்கு ஒரு கண்டன அஞ்சல் உடனே அனுப்ப இயலாது போனதால் இதை வலையிலாவது பதிப்போம் என பதித்துவிட்டேன்.

ஓ-போடு ராகுலுக்கு (ராஜீவ் மகனில்லை)

சென்ற மாதம் இந்தியாவிலிருந்து வந்து NZல் வடக்கு தெற்கு தீபகற்ப்பதினிடயே உள்ள குக் ஸ்ரெயிட்-டை, சுமார் 26 கிமி தூரம், நீந்தி கடந்த ஆதித்யா ரவுத்திற்கு நாமெல்லோரும் ஒரு ஓ போடவாவது வேண்டும்