Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts

இன்றே செய் அதுவும் நன்றே செய்

இந்த மெக்ஸிகோ வளைகுடாவில் பெருக்கெடுத்து ஓடும் கச்சா எண்ணையை எப்படி தடுத்து நிறுத்துவது? அரசியலும், அதிகாரவர்கமும், ஊடகங்களும் அவரவர் நோக்கில் இந்த பிரச்சினையை பார்கிறார்களே தவிர, இதானால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பாதிப்பை பற்றி யாரும் உண்மையாக கவலை படுவதாக தெரியவில்லை.

பல்லாயிரம் வருடங்களாக இயற்கை சேமித்துவைத்த கச்சா எண்ணெய் வீணாவது ஒரு பக்கம், பூமிக்கடியில் பாதுகாப்பாக வைத்திருந்ததை மனிதனின் அசட்டையால் இப்போது பெருக்கெடுத்து கடலில் கலந்து இதனால் கடல் நீரும் அதிலிருக்கும் உயிரினங்களும், கடல் சார்ந்த சூழலும் அதிக பாதிப்புக்கு உள்ளாகியிப்பது இன்னொரு பக்கம், ஆக இரண்டும் பெரும் பிரச்சனைகள்தான்.

மனிதனின் ஒவ்வொரு செயலும் இயற்கையில் ஒரு பாதிப்பை ஏற்படுத்ததான் செய்கிறது அதுவும் ஈடு செய்ய முடியாத படி, அதாவது irreversible damages.

நேற்று மகன் படிக்கும் பள்ளியில் வருடாந்திர பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புக்கு சென்றிருந்தேன். எனது முறைக்கா காத்திருந்தபோது ஆங்காங்கே வகுப்பறைகளின் வெளியே படங்கள், கவிதைகள், செய்திகள், குறிப்புகள் என பல சுவாரசியமான பல விஷயங்கள் இருந்ததை படித்துக்கொண்டிருந்தேன், அதில் ஒன்று ஆண்டன் செக்காவ் எழுதிய Uncle Vanya என்னும் நாடகத்தில் ஒரு பகுதியில் அதில் வரும் அஸ்டரோவ் என்னும் ஒரு மருத்துவர் பாத்திரம் பேசும் வசனம், இப்போது பெரும் பிரச்சனையாக உருவெடுத்து நிற்கும் பூகோள வெப்ப அதிகரிப்பு பற்றியதாக இருக்கிறது. இந்த நாடகத்தை செக்காவ் எழுதிய வருடம் 1896!! அந்த பகுதியை அதை அப்படியே இங்கே படிக்கலாம்:

VOYNITSKY. [Laughing] Bravo! Bravo! All that's very pretty, but it's also unconvincing. So, my friend [To ASTROV] you must let me go on burning firewood in my stoves and building my sheds of planks.

ASTROV. You can burn peat in your stoves and build your sheds of stone. Oh, I don't object, of course, to cutting wood from necessity, but why destroy the forests? The woods of Russia are trembling under the blows of the axe. Millions of trees have perished. The homes of the wild animals and birds have been desolated; the rivers are shrinking, and many beautiful landscapes are gone forever. And why? Because men are too lazy and stupid to stoop down and pick up their fuel from the ground. [To HELENA] Am I not right, Madame? Who but a stupid barbarian could burn so much beauty in his stove and destroy that which he cannot make? Man is endowed with reason and the power to create, so that he may increase that which has been given him, but until now he has not created, but demolished. The forests are disappearing, the rivers are running dry, the wild life is exterminated, the climate is spoiled, and the earth becomes poorer and uglier every day. [To VOYNITSKY] I see irony in your look; you don't take what I am saying seriously, and -- and -- after all, it may very well be nonsense. But when I pass village forests that I have preserved from the axe, or hear the rustling of the young trees set out with my own hands, I feel as if I had had some small share in improving the climate, and that if mankind is happy a thousand years from now I'll have been a little bit responsible for their happiness. When I plant a little birch tree and then see it budding into young green and swaying in the wind, my heart swells with pride and I -- [Sees the WORKMAN, who is bringing him a glass of vodka on a tray] however -- [He drinks] I must be off. Probably it's all nonsense, anyway. Good-bye.


என்ன மாதிரியான ஒரு தீர்கதரிசனம்? இயற்கையின் மீது மிக ஆழ்ந்த உண்மையான ஈடுபாடு கொண்ட மனிதான் இந்த மாதிரி எழுத முடியும்.

சும்மா போற குருவி

உலகெங்கிலும் 48 சதவிகித குரங்கினம் காணாமல் போய்விடும் ஆபத்து உள்ளது என்று நேற்று செய்தியில் காட்டினார்கள். இதற்கு முக்கிய காரணம் அழிந்து வரும் வெப்ப மண்டல காடுகளும், போதா குறைக்கு, வேட்டையாடுதலும் என்று சொல்லுகிறார்கள்.

தன் நலனுக்காக மனிதன் செய்தவைகளால் இப்படி பல மிருக இனங்கள பாதிக்கப்பட்டுள்ளது. சென்ற நூற்றாண்டு துவக்கத்தில் ஒரு லட்சத்திற்கும் மேலாக இருந்த புலிகள் இப்போது வெறும் நாலாயிரமாக குறைந்து போய்விட்டது.

ஒரு மில்லியன் குரல்கள் இயற்கைகாக...........

யுக்கேயில் RSPB பறவைகளை பாதுகாக்க செய்து வரும் சேவை மிக அருமையானது. என்னும் நாடெங்கிலும் பல இடங்களில் பறவைகளுக்கான சரணாலயங்களை பராமரிக்கிறார்கள். இது முற்றிலும் ஒரு தன்னார்வ தொண்டு இயக்கம். வீடு வீடுடாக ஏறி இறங்கி இதற்காக நிதி கேட்டு, இன்னும் பல வகைகளில் இதற்காக செயல்படுகிறார்கள்.

சும்மா போற குவியை சுட்டு தள்ளுவானே....

மால்டா என்னும் மெடிட்டரேனியன் தீவு நாட்டில், ஆப்பிரிக்காவிலிருந்து, ஐரோப்பாவிற்கு வசந்தகாலத்தில் கூட்டம் கூட்டமாக திரும்ப வரும் பறவைகள், மெடிட்டரேனியன் கடலை கடக்கும் முன்பாக இளைப்பாரும். இப்படி வழியில் ஓய்வெடுக்க வரும் பறவைகளை ஜாலியாக வேட்டையாடி போட்டு தள்ளுகிறார்கள் மால்டா வேட்டைகாரர்கள். மால்டா அரசாங்கம், இதை தடுக்கும் சட்டங்கள் இருந்தும், இந்த மாதிரி வேட்டைகளை கண்டு கொள்வதில்லை.






இந்த வேட்டைகளை தடுக்க RSPB யுக்கேயில் பல மக்களிடம் கையெழுத்தும், நிதியும் திரட்டி, ஐரோப்பிய ஒன்றியம் மூலம் மால்டா அரசாங்கத்தை இந்த வேட்டையாடுதலை தடுக்கும் சட்டத்தை கடுமையாக கடைப்பிடிக்கவும், மக்களை வேட்டையாடுவதால் ஏற்படும் இழப்புகள் பற்றி அறிவூட்டவும், மால்டா பறவை பாதுகாப்பு இயக்கத்துக்கு உதவும் முயற்சியை சமீபத்தில் மேற்கொண்டார்கள். இதன் பலனாக ஐரோப்பிய ஒன்றியம் மால்டா அரசாங்கத்தை விளக்கம் கோறியிருப்பது ஒரளவுக்கு நம்பிக்கை தருகிறது.

சும்மா போற குருவிக்கு சோத்த போடுவானே..

சரி இது மனிதனின் உபத்திரவத்தால் உண்டாகும் அழிவு என்றால் RSPB செய்யும் உபகாரத்தாலும் சில மாற்றங்கள் ஏற்படுகிறது. அது எப்படி என்றால், நிதி திரட்டுவதற்காக பல வகை பொருட்களை விற்பனை செய்கிறார்கள். அதில் ஒன்று பறவைகளுக்கு தாணிய வழங்கிகள்.


Domed bird feeder, £20.99, Bird feeders, Window bird feeder, £9.99, Bird feeders, Clingers only bird seed feeder, £10.99, Bird feeders,


பல வகைகளில் கிடைக்கும் இதனை தோட்டத்தில், ஜன்னலில் என பல இடங்களில் வைத்து தாணியத்தை நிரப்பி விட்டால் வீட்டு தோட்டத்தில் வந்து போகும் பறவைகள் உண்ண வசதியாக இருக்கும். சரி நல்ல விஷயமாகத்தானே இருக்கிறது என தோன்றினாலும் இப்படி இந்த விதத்தில் உண்ணும் பறவைகளையும், இதே இன பறவைகள் ஜெர்மனியில் இயற்கையாக உண்ணும் பறவைகளையும் ஆராய்ச்சி செய்ததில் இங்கு யுக்கேயில் வசதியாக இந்த பறவை ஊட்டுவான்களில் சாப்பிடும் பறவைகளின் அலகுகள் மாற்றம் அடைந்து இயற்கையில் உண்ணும் பறவைகளின் அலகைவிட சிறிதாக ஆகிவிட்டதாம்.


நன்றி: Gregor Rolshausen et al Current Biology Volume 19, Issue 24, 29 December 2009, Pages 2097-2101.


இந்த ஆராய்ச்சியில் இந்த பறவைகளின் DNAவிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை குறிப்பிட்டிருக்கிறார்கள். குளிர்காலத்தில் இப்படி உணவு எளிதாக கிடைப்பதால், வழக்கத்தில் இல்லாத குளிர்கால பாதையை(migratory route) புதிதாக இந்த பறவைகள் கடைபிடிப்பதாகவும் கண்டு பிடித்திருக்கிறார்கள். இத்தகைய மாற்றங்கள் நல்லதா கெட்டதா என்னும் கேள்விக்கு விடை கண்டுபிடிக்க இந்த ஆராய்ச்சி முயலவில்லை. அந்த கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும். ஆனால் அது காலம் கடந்த பதிலாக இருக்குமோ??






காலடேனியன் காட்டின் கோலங்கள்

இங்க பக்கத்துல போட்டிருக்கிற கோலத்த பாருங்க..
அட கோலம் என்றால் தமிழ்ல இன்னொரு அர்த்தம் பன்றிங்கோ.

உதாரணத்துக்கு இந்த புராண பாடல்களில் பார்க்கலாம்.




ஆதித் தனிக்கோலம் ஆனான் அடியவர்காச்
சோதித் திருத்தூணில் தோன்றினான் - வேதத்தின்
முன்நிற்னான் வேழம் முதலே எனஅழைப்ப
என்என்றான் எங்கட் கிறை. (--- நளவெண்பா)

கோலமெனு மோருருவு கொண்டுபில மேகி
ஞாலமெவ ணுற்றதென நாடியது தன்னை
வாலிய வெயிற்றினிடை வல்லைகொடு மீண்டு
மூலமென வேநிறுவி மொய்ம்பினொடு போனான் (-19--கந்தபுராணம்)
பன்றிக் காய்ச்சலால் உலகமே அரண்டு போய் பன்றியை கண்டாலே தெறிச்சு ஒடும் அளவுக்கு இந்த (அப்)பிராணி மேல பழி வந்து விட்டது. விமான நிலையத்துல முழு-உடல் வெப்பமாணிகளை வைத்து பிராயனிகளை சோதனை செய்யும் அளவுக்கு பீதி பரவியது. இந்த வெப்பமாணிகளை கடந்து போகும் பிரயாணிகளின் உடல் வெப்பத்தை திரையில் பார்த்தபின் அவர்களை அனுமதிக்க வேண்டும். ஆனால் சமீபத்தில் சென்னை சென்று வந்த நண்பர் சொன்னது என்ன வென்றால், சில அதிகாரிகள் மானிடரை சிறிதுகூட பார்க்காமலேயே பிரயாணிகளை கடந்து செல்ல அனுமதித்து இருக்கிறார்கள். அந்த அதிகாரிகள் எந்த அளவுக்கும் சலித்து/நொந்து போயிருக்க வேண்டும்?

ஆனால் இந்த அப்பிராணியின் மூதாதயைரான காட்டு பன்றி (wild boar) இருக்க வேண்டிய இடமான காட்டில் இல்லாமல் போனதால காடே காணாமல் போய் விடக்கூடும் அபாயம் இருப்பதாக Trees for life அறக்கட்டளை மக்கள் அபிப்ராயப்படுகிறார்கள். இதற்காக இந்த வாரம் பல காட்டு பன்றிகளை சுதந்திரமாக இந்த காலடேனியக் காட்டில் விட்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 13ம் நூற்றாண்டு வாக்கில் இந்த பக்கத்து, ஆங்கிலோ-சாக்ஸன், வைக்கிங் மற்றும் இன்ன பிர குறு, மற்றும் மாமன்னர்களும், ராசாக்களும் பொழுது போகாமல் வேட்டையாடி கிட்டத்தட்ட இந்த வகை பன்றிளை அழித்தே விட்டார்கள்.

இந்த வகை பன்றிகள் மூக்கால் நிலைத்தை கிளறி அதனடியிலிருக்கும் ஒருவகை Rizhomeகிழங்குளை (??) உண்ணும். இந்த வகை செடிகள் fern என்னும் மரங்களை வளரவிடாமல் செய்யும். இந்த பன்றிகள் இதை உண்பதால் இந்த வகை செடிகள் மிகவும் கட்டுப்படுத்தப் பட்டு fern மரங்களும் அதயொட்டிய மற்ற வகை தாவரங்களும் இயற்கையில் எப்படி வளருமோ அவ்வாறே வளர்வதை பரிசோதித்து நிரூபித்திருக்கிறார்கள். ஆக எல்லா ஜீவ ராசிகளுக்கும் பங்கு இருப்பதை மீண்டும் இந்த பன்றியின் முலம் இயற்கை எடுத்து சொல்லியிருக்கிறது. வீரப்பன் போன்று காட்டில் விடப்பட்ட இந்த பன்றிகளை யாராவது வேடையாடி ஏப்பம விட்டுவிடாமல் இருக்க இந்த பன்றிகளின் மீது ட்ரான்ஸ்மீட்டர் பொருத்தியிருக்கிறார்கள்.

ஆக திருமால் வராகமாக தோண்டியெடுத்து பூமிய காப்பாத்துனாருன்னு சொன்னது இதத்தானோ?? பெரியாரிஸ்டுகளால் ஒத்துக்கொள்ள முடியாது.