Showing posts with label மாநாடு. Show all posts
Showing posts with label மாநாடு. Show all posts

நியுஸி மாநாடு - இறுதி பகுதி

அந்தா இந்தான்னு ஒரு வழியா நல்லபடியா மாநாட்ட நடத்தி முடிச்சுட்டோம். ஏகப்பட்ட விஷயங்கள் இருந்ததால, மக்களெல்லாம் அங்க இங்கன்னு இருந்ததால அக்டோபர் (நன்றி ஷ்ரேயா) செப்டம்பர் 30 இரவு 8 மணிவாக்குல கூட்டம் நடந்தேறியது. என்ன நடந்ததுன்னு ஏற்கனவே விலாவாரியா துளசி சொல்லிட்டதால விட்டுபோன மிச்சசொச்சம் இப்பதிவு.

எப்படிரா இப்டி இவுங்களால எழுத முடியுதுன்னு உங்கள்ள நிறைய பேருக்கு தோணியிருக்கும். நேர்ல பாத்தப்பதான் புரிஞ்சுது. பேசுறதே அப்படித்தான். split-second ன்னு சொல்வாங்களே அது மாதிரி எத பத்தியும் ஜோக்தான். மிக அபிரிதமான் நகைச்சுவை உணர்வுள்ளதுனாலதான் இவுங்களால இப்டி எழுத முடியுது என்பதை புரிந்துகொண்டேன். மிக ரசனையுடன் சமீபத்தில் கட்டிய (யானைகளும் அதன் முகமுடைய தெய்வமும் நிறைந்த) வீட்டை சுற்றி காட்டினார். உஞ்சல் (நம்ம தமிழ்நாடு ஸ்டைல்ல) போட்ட ஒரே வீடு நியுஸியிலேயே அநேகமாக துளசி வீடாகத்தான் இருக்கும்.

எதோ புராதான புகைபட டப்பாவை (சலங்கை ஓலி மாதிரி) வைத்து அவங்க இருட்டடிப்பு செஞ்சு படம் போட்டாங்க. அதுனால இங்க 'கப்பு' துளசியுடன் இருக்கும் தெளிவான படம்.




கப்புவுடன் துளசி

copyright NZ-blog conference 2005

வலைப்பதிவர் மாநாடு : இரண்டாம் அறிவிப்பு

இரண்டாவதா? அப்ப முதல் எங்கன்னு கேக்றவங்க இங்க பாருங்க.

"அப்பா டான் ப்ராஷ்க்கு ஓட்டு போடாதே" அப்டின்னு நேத்து எனககு ஒருத்தர் அட்வைஸ் பண்ணினாரு. அது யாருன்னா நம்ம புள்ளாண்டன் (ஒம்பது வயசுதா ஆகுது). என்னடான்னா அவன் பள்ளிக்கூடத்துல மத்த கிவி புள்ளங்கெல்லாம் நேஷ்னல் பார்டி ஆட்சிக்கு வந்தா உங்களெல்லாம் (அதாவது ஆசியாவிலிருந்து வந்தவங்கள) திரும்ப உங்க நாட்டுக்கே அனுப்சுருவாங்கன்னு 'டிஸ்கஸ்' பண்ணிக்கிட்டாங்களாம். என்ன சொல்றதுன்னே தெரில போங்க. நாம இவிங்க ஸ்கூலுக்கு போயி ஏதோ வாய்பாடம், படம் போடறது, ஆங்கில இலக்கணம் படிக்கிறதுன்னு ஏதாவது கத்துக்குவாய்ங்கன்னு பாத்தா நமமெக்கே அட்வைஸ் பண்ற அளவுக்கு போய்ட்ருக்காய்ங்க.

ஆக மக்களே இதமாதிரி சாமாச்சாரம் (உள்)நாட்டு நடப்புன்னு எல்லாத்த பத்தியும்
இந்த மாத இறுதியில் நியுசிலாந்தில், க்ரைஸ்ட்சர்சில் வலைபதிவு மாநாட்டுல விவாதம் பண்ணலாம். கலந்துக்க விரும்புறவங்க அவவங்க வீட்டையோ, அல்லது காரையோ விற்று சொந்த செலவில் வந்து கலந்துக்கணும்னு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த மாநாட்டின் சிற்பம்சமா "100 பதிவுகள் கண்ட" அஸி-நியுஸி பிராந்த்தியத்தின் தலைசிறந்த வலைபதிவாளினி துளசி கோபால் அவர்களை பேட்டி காண உள்ளேன். ஆகவே, இவங்க கிட்ட நீங்க கேக்க நெனச்சு தள்ளிப்போட்ட கேள்விகளை என் தனி மடலுக்கு அனுப்பவும் (பின்னூட்டத்துல போட்டீங்கன்னா துளசி படிச்சு உஷாராயிடுவாங்க அதுனால ரகசியமா இருக்க தனிமடலிலே அனுப்பவும்). பேட்டியை பின்பு மாநாட்டுக்கு வரயிலாதவர்கள் வசதிக்காக என் வலையில் பதிக்கப்படும்.