Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

நடந்தவை நடப்பவை-7

சமீபத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகள் மூலம் இந்தியாவில் மனித உரிமை அல்லது தனி மனித சுதந்திரம் எப்படி இருக்கிறது என்பதை மிக சுலபமாக புரிந்து கொள்ளலாம்.

ஒன்று மங்களூர் pubபில் (தமிழ்ல்??) பெண்களை அடித்து ஒட ஒட துரத்தியது. பார் என்பது ஆண்களுக்கு மட்டும் தானா என்ற கேள்வி மேலோட்டமாக இருந்தாலும் அதன் பின் உள்ள ஆணாதிக்க சமூக நிலைபாடு எல்லோருக்கும் (பெண்களுக்கும் கூட) பொதுவாகவே உள்ளது. pubபுக்கு போகும் பெண்ணை தவறான கண்ணோட்டத்துடனே பார்க்கும் மனோபாவம் மிக இயல்பான ஒன்று. கலாசாரம் மாறுவதை யாரால தடுக்க இயலும்? காலம் மாறினால் கலாச்சாரமும் மாறும். சட்டங்களும், நம்பிக்கைகளுமே கூட மாறித்தான் போகும். ஆனாலும் ராம சேனைகள் மாறுதலை தாங்க முடியாது சிறு குழந்தைகள் போல செய்யும் அடாவடிகள் (tantrums) இவர்களும் (மன) வளர்ச்சியுற்று தவிர்க்கவே முடியாத மாறுதலுக்கு உட்பட்டாலே ஒழிய இந்த மாதிரி கிளர்ச்சிகள் நடந்துகொண்டுதானிருக்கும் போலிருக்கிறது.

இப்போது வர இருக்கும் வெலண்டைன்ஸ் தினத்தையும் எதிர்த்து இந்த ராம சேனா கிளர்ச்சி செய்ய இருப்பதால் இவர்களை எதிர்த்து வலையில், facebookல் ஒரு 5000 உறுப்பினர்கள் (ஆண்கள் உட்பட) தங்களது கண்டனத்தை, இந்த ராம சேனைக்கு இளஞ்சிவப்பு உள்ளாடை அனுப்புவதன் மூலம் தெரியபடுத்தி இருக்கிறார்கள்.




இனி மற்றொன்று மும்பையில் நடந்த தீவிர வாத தாக்குதலின் போது NDTV இதனை ஒளிபரப்பிய விதத்தை விமர்சித்து தனது வலைத்தளத்தில் எழுதியதை கண்டித்து அந்த வலைப்பதிவாளருக்கு அவர் எழுதியதை நீக்குவதல்லாமல் மன்னிப்பும் கோர வேண்டும் என்றுநீதிமன்ற எச்சரிக்கை அனுப்பியது. அதன் பின் வேறு வழியின்றி அவர் அதை நீக்கி தன் வலைத்தளத்தில் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

ஆக உங்களுக்கு பேச்சுரிமை மீது நம்பிக்கையிருந்தால் NDTVயின் நடவடிக்கையை எதிர்த்து உங்கள் வலையில் ஒரு சிறு எதிர்ப்பை தெரிவிக்கவும்.

Shame on NDTV, Ms Burkha Dutt, and Mr. Prannoy Roy


பிகு:
NDTV: A very popular TV news media is funded by Gospels of Charity in Spain Supports Communism. Recently it has developed a soft corner towards Pakistan because Pakistan President has allowed only this channel to be aired in Pakistan . Indian CEO Prannoy Roy is co-brother of Prakash Karat, General Secretary of the Communist party of India . His wife and Brinda Karat are sisters.

இந்தியாவில் ஆண்களை நம்ப முடியாது

--அப்படின்னு மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ரேணுகா செளத்ரி சொல்லியிருக்காங்க. வீட்ட விட்டு வெளில போகும் ஆம்பளங்க இரவு வீட்டுக்கு திரும்ப வரதுக்கு முன்னாடி எங்கெல்லாம் போறாங்கன்னு வீடல இருக்கும் பொம்பளங்களுக்கு தெரியாது. அதனால அமைச்சர் என்ன சொலறாஙகன்னா பெண்கள் அவசியம் ஆணுறை உபயோகிக்க வேண்டும் என்று.

இப்படி ஒரே போடா போட்டுட்டாங்களேன்னு பாத்தா ஒரு வகைல கட்டுக்கடங்காம பரவும் எய்ட்ஸ் நோயால் (2.5 மில்லியன் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர் அதில் 40 சதவிகிதம் பெண்கள் இதில பலர் குடும்ப பெண்கள், இவர்களுக்கு எய்ட்ஸ் வந்தது அவுங்கவுங்க ஊட்டுகாரர் மூலமாக) . இதுனாலதான் ரேணுகா, என்ன செய்வதென்று தெரியாமல் நொந்து போய் இப்படி சொல்லியிருக்காங்க. பல பெண்கள் தங்கள் (வேறு பெண்களிடம் போய் வரும்) கணவரிடம் பாதுகாப்பான உறவு வைத்துக்கொள்ள கேட்க்கும் அதிகாரமோ உரிமையோ இல்லை என்பதால் பலர் இதற்கு பலியாகி உள்ளனர். ஒரு கோடி மக்கள் தொகையை தாண்டி போய்கொண்டிருக்கும் இந்தியாவில் செக்ஸ் பறறி பேசவே கூச்சப்பட்டுக்கொண்டிருந்தால எய்ட்ஸை எப்படி கட்டுப்படுத்துவது? ரேணுகா சொல்வது சரிதான்.

தெற்காசிய தீவிரவாதம்

சமீபத்தில் மியுனிச் படம் பார்த்தேன். உண்மையில் நடந்த விஷயங்களை, கிடைத்த ஆதரங்களை கொண்டு மிக நேர்த்தியான திரைவடிவம் கொடுத்துள்ளார் ஸ்பீல்பெர்க். ஒரு புத்தகம் படிக்கும் போது எழுத்தாளரின் வர்னனைக்கேற்ப வாசிப்பவனின் கற்பனை விரியும்போது அந்த அனுபவம்தான் ஒரு படைப்பின் தரத்தை நிர்ணயிக்க உதவும். ஆனால் திரைப்படத்தில் இது சற்று கடினம். மியுனிச்சில் பார்வையாளனின் கணிப்புக்கு விட்டு மிக அழகாக காட்டியிருக்கிறார். மிக சில படங்களே இந்த அனுபவத்தை கொடுக்கும். சரி இதுக்கும் தெற்காசிய தீவிரவாதத்துக்கும் என்ன சம்பந்தம்?

கே.பி.எஸ் கில்லை தெரியாதவர்களுக்கு, பஞ்ஜாபில் காளிஸ்த்தான் தீவிரவாதத்தை அடியோடு ஒழித்து கட்டிய பெருமை இவருடையது.

இரை தேடும் பறவைகள் தெய்வத்தலங்களில் காணப்படும்
எனினும் உயிருள்ள ஜீவனையும் அவை உண்ணும்
வெண்மையான உடையுடுத்தியிருந்தாலும்
அவற்றின் மனம் தீங்கு நிறைந்தது

என்ற குரு க்ரந்த்தை எடுத்துக்காட்டி ஒரு புத்தகம் (The Knights of Falsehood) எழுதியிருக்கிறார். ஓய்வு பெற்ற இந்த முன்னாள் காவல் துறை டைரக்டர் ஜென்ரல் இப்போது Institute of Conflict Management, என்ற தனியார் கல்வி நிறுவனத்தின் தலைவராக இருக்கிரார். இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான்,நேபாள், மற்றும் இலங்கை என இந்த எல்லா தேசங்களிலும் நிகழும் தீவிரவாதங்களை கிட்டத்தட்ட வானிலை அறிக்கை அளவுக்கு தினமும் புள்ளிவிவரம் தருகிறார்கள் SATP என்ற வலைத்தளத்தில். எல்.டி.டியினால் இதுவரை 41 பிரபலமான, முக்கியமான் பதவிகளில் இருந்தவர்களை தற்கொலை தாக்குதல் மூலம் பரலோகம் அனுப்பியிருக்கிறார்கள் என்ற பட்டியலை பார்க்கும் போது தலை சுற்றுகிரது. இதில் இரண்டு ஜனாதிபதிகள், ஒரு பிரதம மந்திரி (ராஜீவேதான்)பன்னிரண்டுக்கும் அதிகமான எம்.பிக்கள், பிர விடுதலை இயக்கத் தலைவர்கள் என பார்த்து பார்த்து பறித்திரிக்கிறார்கள். இவர்களை எதற்காக சாகடித்தார்கள் என்பதற்கு நேரடியான விளக்கம் கடினம். புலிகளைப் பற்றி இது காட்டும் பிம்பம் என்ன? இத்தனை பேரை போட்டுத்தள்ளிய பின்பும் ஈழம் இன்னும் உதயமாகவில்லை என்பதுதான் நிதர்சனம். பாலஸ்தீனமும் தோன்றவில்லை. இன்னும் எத்தனை காலம் ஆகுமோ?

இந்த நிறுவனம் செய்யும் சேவைகள் சுவாரஸ்யமானது. Faultline என்னும் ஒரு பத்திரிக்கை நடத்துகிறார்கள், பாதுகாப்பு பயிற்சி அளிக்கிறார்கள், மிக முக்கியமானது தீவிரவாதம், தீவிரவாதிகள் குழுக்கள் பற்றிய புள்ளிவிவரங்கள் செய்திகளை உள்நாடு மற்றும் வெளிநாட்டு செய்தி நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்.

பாராட்டினார்கள், பதக்கம் குடுத்தார்கள் என்று குத்திக்கொண்டு, அக்கடாவென்று ஈஸி சேரில் படுத்து, பல்லிடுக்கில் மாட்டிக்கொண்டதை நோண்டிக்கொண்டிருக்காமல் இப்படி ஒரு கல்வி நிறுவனத்தை அமைத்து நடத்துவது பாராட்டத்தக்கது. எனினும் நிறுவனம் நடத்த நிதியெங்கே என்று தேடும்போது மியுனிச்சில் வரும் லுயியின் அப்பா செய்வது போல் கில்லும் செயதால் என்ற கற்பனை அச்சமூட்டுவதாக இருக்கிரது. இதுவே ஸ்பீல்பெர்கின் வெற்றி.

கொசுறு:

சந்தேகம் தெளிதல்:

இலக்கியம்னா என்ன? அறத்தை பத்திச் சொல்றது. நன்றி தே.தி.மு.க தலைவர்.

டயலாக்:

இனம் இனத்தோடுதான் சேரும். நன்றி கருணாநிதி

ஆஸ்த்ரேலியா - இந்தோனேஷியா பகையும்..

அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்த மாதிரி ஆஸ்த்ரேலியா இந்தோனேஷியா மீது படையெடுத்தால் அது ஆச்சர்யபடுவதற்க்கில்லை. அந்த அளவுக்கு சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 4-1/2 கிலோ போதை பொருள் வைத்திருந்ததாக ஷப்பெல் கோர்பி என்ற 27 வயது ஆஸ்த்ரேலிய பெண் கைது செய்யப்பட்டு மே 28ம் தேதி 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். இதை நேரடியாக TVல் ஒலிபரப்பப்பட்டபோது ஆஸ்த்ரேலியாவே அந்த 5 நிமிடங்களுக்கு ஸ்தம்பித்துப் போய் பார்த்துக்கொண்டிருந்ததாம்.

இது சரியா தவறா என்று சிண்டை பிய்துக்கொண்ட்டு விவாதிக்கிறார்கள். ஒட்டு மொத்த ஆஸ்த்ரேலியர்களும் இந்தோனேஷியாவை புறக்கணிக்க வேண்டுமென்கிறார்கள். இதன் மூலம் இந்தோனேஷியா மீது மேற்கத்தியர்கள் கொண்டுள்ள அபிப்ராயம்:


1. நாணயமற்ற அரசு
2. படிப்பறிவில்லாத மக்கள்
3. ஊழல் நிறைந்த நாடு
4. போலிசும் நீதிமன்றமும் நேர்மையில்லாதது, ஊழல் நிறைந்தது.


ஆகவே மக்களே (மேற்கத்தியர்களுக்கு) இந்த லீவுக்கு பாலி போகலாம்னு இருந்தியா? வேண்டாம். ஆஸ்த்ரியாவோ, லிஸ்பானோ இல்லை பாரீசுக்கோ போங்களேன்னு உபதேசம் செய்கிறார்கள். இப்பத்தான் சுனாமி வந்து ஒரு வழியாக மீண்டு கொண்டிருக்கிறார்கள். சுற்றுலாவை நம்பியிருக்கும் ஒரு நாடு. இந்த மாதிரி கண்மூடித்தனமாக ஒரு நாட்டை பகிஷ்கரித்தல் சரியா? அங்குள்ள ஹோட்டல் தொழிலாளியோ, கைவண்டி இழுப்பவனோ, டாக்ஸி ஓட்டுபவனோ இவர்களை என்ன செய்தான்?

இதன் பின்னனி என்ன?போதை பொருள் வைத்திருந்ததால் மரண தண்டனை. இது இந்நாட்டின் மிகதெளிவாக அறிவிக்கப்பட்ட சட்ட விதி. கோர்பிக்கு அளித்த நீதி வாக்குமூலம் கூட நிரபராதி என்று நிரூபிக்கும் வரை (Guilt until proven inocence) என்றுதான் குறிபிடுகிறது. அனால் கோர்பி எப்படி நிரூபிப்பார் அதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

அஸ்த்ரேலியாவிலோ, அமெரிக்காவிலோ 4-1/2 கிலோ போதை பொருளை எடுத்துக்கொண்டு போய் கையும் களவுமாக பிடி பட்டால், "இல்லீங்க ஏதோ எனக்கே தெரியாம நடந்து போச்சுன்னு" சொன்னா அங்க உள்ள ஜட்ஜு "சரிடா கண்ணா இனிமே பாத்து நடந்துக்கோன்னு" அனுப்ச்சுடுவாங்களா?இதனால ஒரு நாடுட்கெதிராக கண்டமேனிக்கும் வசை பாடுவதும், அங்கு உள்ள மக்கள் மொத்தமாக கேவலமானவர்கள் என்றும் சொன்னால் அது சரியாகுமா?

இவுங்களுக்கு (மேற்கத்தியர்) இவுங்க ஊர்ல காக்கா தலைகீழா பறக்கும்னு சொன்னா நியாயம். இதையே பக்கத்து ஊர்க்காரனும் சொன்னான்னா அவிங்கெல்லாம் காட்டுவாசிங்க. இவிங்களும் இவிங்க மேண்மையும்...ஹும்.